»   »  தமிழன் என்று சொல் ஒவ்வொரு தமிழனையும் பெருமைப்படுத்தும்... சின்ன கேப்டனின் நம்பிக்கை இது!

தமிழன் என்று சொல் ஒவ்வொரு தமிழனையும் பெருமைப்படுத்தும்... சின்ன கேப்டனின் நம்பிக்கை இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழன் என்று சொல் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழரையும் பெருமைபடுத்தும் படமாக இருக்கும் என்று படத்தின் நாயகன் சண்முகப் பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

5 வருடங்களுக்குப் பின்னர் விஜயகாந்த் நடிக்கும் படம் தமிழன் என்று சொல். சண்முகப் பாண்டியன் ஜோடியாக சோயா அப்ரோஸ் நடிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.


இப்படம் குறித்து தமிழன் என்று சொல் படத்தொடக்க விழாவில் விஜயகாந்த், சண்முகப் பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர் ஆதி பேசியவை குறித்து இங்கே காணலாம்.


தமிழர்களை பெருமைபடுத்தும் படம்

தமிழர்களை பெருமைபடுத்தும் படம்

தமிழன் என்று சொல் தொடக்க விழாவில் பேசிய நடிகர் சண்முகப் பாண்டியன் "50, 60 கதைகள் கேட்ட பின்னரே இந்தப் படத்தின் கதையை நான் தேர்ந்தெடுத்தேன். அண்ணனும், அம்மாவும் தான் இந்தப் படத்தின் கதையை கேட்டனர். மிகவும் வித்தியாசமான ஒரு கதை, கண்டிப்பாக இது ஒவ்வொரு தமிழர்களையும் பெருமைபடுத்தும்.எல்லோரும் இந்தப் படத்தைப் பாருங்கள். தமிழன் என்றால் யாரென்று உலகத்திற்கு இந்தப் படத்தின் மூலம் தெரியவரும்" என்று சண்முகப் பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.


விஜயகாந்திற்கு இசையமைப்பது சவாலானது

விஜயகாந்திற்கு இசையமைப்பது சவாலானது

இசையமைப்பாளர் ஆதி பேசும்போது "கேப்டன் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார் அவர் படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று செய்திகள் வந்தவுடன் அனைவரும் ஒரே கேள்வியைத் தான் கேட்டனர். அதாவது இந்தப் படத்திற்கு ஏன் இசையமைக்க ஒப்புக் கொண்டீர்கள் என்று என்னைக் கேட்டனர். அவர்கள் அனைவரிடமும் நான் கூறிய ஒரே பதில் ஹிப்ஹாப் தமிழா என்ற ஆல்பம் மூலமாகத் தான் நான் இசையுலகில் நுழைந்தேன். இந்தப் படத்தின் தலைப்பும் தமிழை மையப்படுத்தியே உள்ளது மேலும் விஜயகாந்த் சாரின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.


தமிழன் என்று சொல்லடா

தமிழன் என்று சொல்லடா

படம் வெற்றியா, தோல்வியா என்று கவலைப் படப்போவதில்லை. தமிழுக்காக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன், விஜயகாந்த் சாரின் படத்திற்கு இசையமைப்பது கண்டிப்பாக ஒரு சவால்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று இந்தப் படத்தில் எழுந்து நிற்கப் போகிறேன்" என்று இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறினார்.


படத்தின் தலைப்பு

படத்தின் தலைப்பு

5 வருடங்களுக்குப் பின்னர் நடிக்க வந்தது குறித்து நடிகர் விஜயகாந்த் "நடிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த நான் இந்தப் படத்தின் கதை காரணமாக மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். எனது மனைவியும், மகனும் இந்தப் அப்டத்தின் கதையைக் கூறி என்னை நடிக்க வற்புறுத்தினார்கள். பின்னர் படத்தின் இயக்குநர் வந்து என்னிடம் கதை கூறினார். சண்முகப் பாண்டியன் நடிக்கிறார் என்பதைத் தவிர தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்படம் என்பதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.இயக்குநர் சொன்ன கதையில் ஒரு தீவிரம் இருந்தது அதனால் நான் நடிக்கிறேன் என்று அவர் முன்பே ஒப்புக் கொண்டேன். முக்கியமாக இந்தப் படத்தின் தலைப்பு காரணமாகத் தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்" என்று விஜயகாந்த் கூறினார்.


விஜயகாந்த்தின் ஒவ்வொரு பேச்சிற்கும் கைத்தட்டல்கள் பலமாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.English summary
Tamizhan Endru Sol Movie Launch Function Actor Shanmuga Pandian Says "Tamizhan Endru Sol will make every Tamilian proud".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil