சாய் பல்லவியுடன் டூயட் பாட ஆசைப்படும் 66வயது நடிகர்.. மேடையிலேயே ஓபனா சொல்லிட்டாருய்யா!
சென்னை: சாய் பல்லவியுடன் டூயட் பாட வேண்டும் என 66 வயது உச்ச நடிகர் ஒருவர் ஓபனாக கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி. இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிரஞ்சீவி.
சினிமாத்துறையில் 40 ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள சிரஞ்சீவி, தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

லவ் ஸ்டோரி பட விழா
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி நடிகை சாய் பல்லவியுடன் டூயட் பாட ஆசையாக இருப்பதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதாவது தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 'லவ் ஸ்டோரி'. ரொமான்டிக் படமான இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

சாய் பல்லவியுடன் டூயட் பாடணும்
இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது "நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை. ஏனென்றால், அவருடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடவே நான் விரும்புகிறேன்.

அண்ணனாக நடிக்க விருப்பமில்லை
அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை என்று நகைச்சுவையாக கூறினார். போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் படக்குழுவினர் அணுகினர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆச்சார்யா மற்றும் காட் ஃபாதர்
உச்ச நடிகரான சிரஞ்சீவி சாய் பல்லவியுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று மேடையிலேயே ஓபனாக பேசியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. சிரஞ்சீவி தற்போது ஆச்சர்யா மற்றும் காட் ஃபாதர் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியுடன் ராம்சரண் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.

லூசிஃபர் ரீமேக் காட் ஃபாதர்
இதேபோல் காட் ஃபாதர் படத்தை நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரான இயக்குநர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். காட் ஃபாதர் திரைப்படம் மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் ஆகும். மலையாளத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் மோகன் லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











