எத்தனை கோடி கொடுத்தாலும் இது கிடைக்குமா?.. ட்விட்டரில் சாதனை செய்த அல்லு அர்ஜுன்!
ஐதராபாத் : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ட்விட்டரில் 7 மில்லியன் ரசிகர்களை பெற்று ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Recommended Video
இவரது பல படங்கள் தெலுங்கில் ஹிட் அடித்து மிகச்சிறந்த ரசிகர்கள் வட்டத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இவர் நடிப்பில் கடந்து ஆண்டு வெளிவந்த புஷ்பா படம் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வட்டாரத்தை விரிவுப்படுத்தி விட்டது எனலாம்.

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தெலுங்குத் திரையுலகில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதனால் இவர் எவர்கிரீன் சூப்பர் ஹிட் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

ஹிட் மூவிஸ்
அவர் நடிப்பில் வெளியான ஆர்யா 2, S/O சத்தியமூர்த்தி மற்றும் ருத்ரமாதேவி, சர்ரைனோடு ஆர்யா 2, சங்கர் தாதா ஜிந்தாபாத், வருடு, வேதம், ரேஸ் குர்ராம்,, DJ: துவ்வாடா ஜகன்னாதம் மற்றும் அல வைகுந்தபுரமுலு போன்ற பல படங்கள் வெற்றி பெற்றன.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரிலீசான புஷ்பா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன அந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு, பேச்சு, பாடி லாங்வேஜ் என அனைத்தும் மாஸாக இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

புஷ்பா
புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக படமாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதேபோல் இப்படத்தில் கூடுதலாக ஒரு வில்லன் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டு அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்திய மொழிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மொத்தம் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

புதிய சாதனை
இந்நிலையில், ட்விட்டரில் அதிகம் தொடரப்பட்ட தெலுங்கு நடிகர்கள் பட்டியலில் 7 மில்லியன் ரசிகர்களை பெற்று இரண்டாவது இடத்தை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.இவரது இந்த சாதனையை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.புஷ்பா படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனுக்கு பேன் பாலோவர்ஸ் கணிசமாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











