»   »  தல 57: ஏமாற்றிய சத்யஜோதி பிலிம்ஸ்...வருத்தத்தில் அஜீத் ரசிகர்கள்!

தல 57: ஏமாற்றிய சத்யஜோதி பிலிம்ஸ்...வருத்தத்தில் அஜீத் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடியவில்லை எனக்கூறி, அஜீத் ரசிகர்களிடம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டிருக்கிறது

சிறுத்தை சிவா-அஜீத் கூட்டணி 3 வது முறையாக தல 57 படத்தில் இணைந்துள்ளது. இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, ரித்திகா சிங் என 2 நடிகைளை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர காமெடிக்கு கருணாகரனை புக் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். எனினும் இப்படம் குறித்த எந்தத் தகவல்களையும் படக்குழுவினர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

Thala 57 Details Today Revealed

இதனால் அஜீத் ரசிகர்கள் இப்படம் குறித்த தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் மாலை இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என இன்று காலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனால் உற்சாகமடைந்த அஜீத் ரசிகர்கள் #thala57 என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களை தெறிக்க விட்டுக் காத்திருந்தனர்.

இந்நிலையில் ''இன்று இப்படம் குறித்த தகவல்களை வெளியிட முடியவில்லை. ரசிகர்களைக் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்'' என்று சத்யஜோதி நிறுவனம் தெரிவித்திருகிறது.

இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். முன்பாக 'வேதாளம்' படத்துக்கு படக்குழு இதேபோல செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sathya Jyothi Films says ''Sorry for the trouble; update on the official social media handles of #Thala57 will be posted on a later date.Apologies to keep you waiting''.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil