»   »  அமெரிக்கா போலாமா, யு.கே. போலாமா?: யோசனையில் 'தல 57' குழு

அமெரிக்கா போலாமா, யு.கே. போலாமா?: யோசனையில் 'தல 57' குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தல 57' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து சிவா, அஜீத் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் தல 57. படத்தின் தற்காலிக பெயர் தான் 'தல 57'. படத் தலைப்பை சிவா அவ்வளவு சீக்கிரத்தில் அறிவிக்க மாட்டார்.

Thala 57 team to fly to USA or UK

இந்த படத்தின் தலைப்பு டிசம்பர் மாதம் தான் அறிவிக்கப்படுமாம். முதல்கட்ட படப்பிடிப்பை ஐரோப்பாவில் முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியது. இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை அமெரிக்கா அல்லது இங்கிலாந்து நடத்த திட்டமிட்டுள்ளாராம் சிவா.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் 2 வாரங்களில் துவங்குகிறது. இதற்கிடையே இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்றும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

படத்தில் அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடிக்கிறார். தமிழகத்தில் நடக்கும் ஒரு கொலை வழக்கை விசாரிக்க உலகம் முழுவதும் சுற்றுகிறாராம் தல.

English summary
Thala 57 team may fly to the USA or Uk for the next schedule of the Ajith starrer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil