»   »  இன்டர்போல் அதிகாரியாக அஜீத்: ஜிம்மில் மாங்கு மாங்குன்னு 6 மணிநேரம் ஒர்க்அவுட்

இன்டர்போல் அதிகாரியாக அஜீத்: ஜிம்மில் மாங்கு மாங்குன்னு 6 மணிநேரம் ஒர்க்அவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக வருகிறாராம். இதற்காக தல ஜிம்மில் தினமும் 5 முதல் 6 மணிநேரம் ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் 'தல 57'. படத்தில் காஜல் அகர்வால் உள்பட 3 ஹீரோயின்கள். அஜீத், காஜல் உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்கனவே பல்கேரியாவுக்கு கிளம்பி சென்றுவிட்டனர்.

Thala turns interpol officer for Siva

படத்தில் அக்ஷரா ஹாஸனுக்கு ஆக்ஷன் கலந்த கதாபாத்திரமாம். அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்று குறித்து விசாரணை நடத்தும் அஜீத் அது தொடர்பாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவாராம்.

இன்டர்போல் அதிகாரி கதாபாத்திரத்தில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக அஜீத் தினமும் ஜிம்மில் 5 முதல் 6 மணிநேரம் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்து வருகிறாராம். படத்தின் 70 சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறது என தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த படம் அஜீத்தின் உலகம் சுற்றும் வாலிபன் ஆகும். மூன்றாவது ஹீரோயின் கவுரவத் தோற்றத்தில் வந்து செல்வார் என தியாகராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more about: ajith, தல 57, அஜீத், thala 57
English summary
Ajith is acting as interpol officer in his upcoming movie Thala 57 being directed by Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil