இந்த போட்டோ அதுக்கு தானா... ட்விட்டரை திண்டாட வைக்கும் விஜய் ரசிகர்கள்
சென்னை : ஒரே ஒரு போட்டோவை வைத்து ட்விட்டரை திணறடித்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இதுல இவ்வளவு இருக்கா...இதெல்லாம் நாங்க யோசிக்கவே இல்லையே...உங்களுக்கு மட்டும் எப்படிடா இதெல்லாம் தெரியுது என கேட்டு நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விரைவில் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தின் அப்டேட்கள் வர துவங்கி விட்டன.

விரைவில் தளபதி 66 ஷுட்டிங்
பீஸ்ட் பட வேலைகள் முடிந்ததும் தளபதி 66 பட ஷுட்டிங் துவக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் இந்த படம் பற்றி தயாரிப்பாளர் தில் ராஜுவே பல அப்டேட்களை வெளியிட்டு விட்டார். தளபதி 66 படம் தீபாவளிக்கு அல்லது 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் குடும்ப சென்டிமென்ட் படத்தில் நடிக்க உள்ளதாக கூறி உள்ளார். இதனால் பீஸ்ட் படத்தை போல தளபதி 66 ஹேஷ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி வந்தனர்.

விஜய் எடுத்த செம போட்டோ
இந்நிலையில் இன்று காலை டைரக்டர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் திலீப் குமார் ஆகியோர் செல்ஃபி எடுத்துக் கொள்வதை போன்ற போட்டோ ஒன்றை லோகேஷ் கனகராஜ், விஜய்யின் மகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இன்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர். இந்த போட்டோ அதிகமானவர்களால் பகிரப்பட்டு, காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அதிலும் இவர்கள் செல்ஃபி எடுக்கும் போட்டோவை எடுத்தது விஜய் தான் என்ற தகவல் பரவியதும், இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

டிரெண்டிங்கில் Thalapathy67
இதற்கிடையில் ட்விட்டரில் திடீரென Thalapathy67 என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதோடு, Bigil, Master போன்ற ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் சேர்ந்து கொண்டுள்ளன. இதில் 3 டைரக்டர்கள் செல்ஃபி எடுத்ததை விஜய் எடுத்த போட்டோவை அதிகமானவர்கள் பகிர்ந்து வருகின்றனர். தளபதி 67, 68, 69 படங்களின் டைரக்டர்கள் இது தான். தபளதி 67 படத்தை இயக்க போவது யார் என்ற க்ளூ இதில் தான் உள்ளதா என பலரும் கேட்டு வருகிறார்கள்.
Recommended Video

அந்த போட்டோ இதுக்கு தானா
2023 ல் அட்லீ - விஜய் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்ததால் தளபதி 67 படத்தின் டைரக்டர் அட்லியாக இருக்கலாம் என பலர் கூறி வருகிறார்கள். விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்க போகும் டைரக்டர்கள் ஒன்றாக இணைந்திருக்கும் போட்டோ என்பதாலும், அதையும் விஜய்யே எடுத்துள்ளார் என்பதும் தான் இந்த போட்டோவின் ஸ்பெஷல் என கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











