»   »  ஃபீலிங்கோ ஃபீலிங்கில் இருக்கும் சிவகார்த்திகேயன்

ஃபீலிங்கோ ஃபீலிங்கில் இருக்கும் சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிக்க வந்தது குறித்து சிவகார்த்திகேயன் ஃபீலிங்கோடு ட்வீட் போட்டுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் ஹீரோவானவர் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

அஜீத், விஜய்க்கு இணையாக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிரட்டுகிறார்.

6 ஆண்டுகள்

சிவகார்த்திகேயன் நடிக்க வந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக தனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார் அவர்.

விஜய்

விஜய்

குட்டீஸ்களுக்க விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது குட்டீஸ்களுக்கு விஜய்யோடு சேர்த்து சிவகார்த்திகேயனையும் ரொம்ப பிடித்துள்ளது. இதை விஜய்யே ஒருமுறை தெரிவித்துள்ளார்.

ஆசை

ஆசை

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருபவர்கள் சிவகார்த்திகேயன் போன்று ஆக வேண்டும் என்ற ஆசையோடு வருகிறார்கள். அடுத்த சிவகார்த்திகேயன் ஆகும் ஆசையில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பெரிய திரைக்கு வருவது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

பிரபலங்கள்

பிரபலங்கள்

நடிக்க வந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அனிருத்

அனிருத்

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க உள்ளார்.

English summary
Sivakarthikeyan has completed six years in Kollywood. He took to twitter to thank the fans, co-stars, directors, producers, music directors, technicians and others who have made it possible.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil