»   »  கின்னஸுக்கு கந்தசாமி!

கின்னஸுக்கு கந்தசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil


மெகா பட்ஜெட், மகா படைப்பு போன்ற வார்த்தைகளுக்கு சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டவர்களில் கலைப்புலி தாணு முக்கியமானவர், முதன்மையானவர். அவரது தயாரிப்பில் உருவாகப் போகும் கந்தசாமி மூலம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் தாணு.

கலைப்புலி பெருமையுடன் வழங்கும், பிரமாண்டமாகப் படைக்கப் போகும் கந்தசாமியில், விக்ரம்தான் நாயகன். இப்படத்துக்கான அழைப்பிதழை ரூ. 15 ஆயிரம் செலவில் (அதாவது ஒரு இன்விடேஷனுங்கோ!) தயாரித்து அத்தனை பேரையும் வியப்பில் விழி விரிய வைத்துள்ளார் தாணு.

இது சாதாரண இன்விடேஷன் இல்லை. எலக்ட்ரானிக் இன்விடேஷன். உலக சினிமாவில் இப்படி ஒரு கிராண்டான இன்விடேஷன் எந்தப் படத்தின் தொடக்க விழாவுக்கும் அச்சிடப்பட்டதில்லையாம். அந்த வகையில் இது ஒரு உலக சாதனை என்கிறார்கள். தாணுவும் அப்படித்தான் சொல்கிறார்.

சீயான் விக்ரம், சிலிர்க்க வைக்கும் ஷ்ரியா, கலக்க வைக்கும் ரகுவரன், நகைக்க வைக்க விவேக் என பெரும் தலைகளுடன் உருவாகப் போகும் கந்தசாமியை இயக்கப் போகிறவர் சுசி. கணேசன்.

கந்தசாமி படத்தின் தொடக்க விழா சென்னை சத்யம் சினிமாஸில் திங்கள்கிழமை நடந்தது. நிகழ்ச்சியில் தாணு பேசுகையில், அழைப்பிதழ்தான் பெரிதாக பேசப்படுகிறது. அதற்கு ஐடியா கொடுத்தவர் சுசி. கணேசன்தான். அவர்தான் இப்படி ஒரு வித்தியாசமான யோசனையைச் சொன்னர்.

இதற்காக கிரீஸ், இத்தாலி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் விசிட் அடித்து விவரம் சேகரித்து வந்தார். கடைசியாக ஒரு இன்விடேஷன் ரூ. 15,000 செலவில் சீனாவில் வடிவமைத்து அச்சடித்தோம். உலக சினிமாவில் இது ஒரு புது முயற்சி, முதல் முயற்சி, இன்னும் சொல்லப் போனால் நிச்சயம் கின்னஸ் புத்தகத்தில் இது இடம் பெறும் என்றும் நம்புகிறோம் என்றார் சந்தோஷத்துடன்.

சுசி. கணேசன் பேசுகையில், தாணு போன்ற தயாரிப்பாளர் இருப்பதால்தான் இது சாத்தியமானது. செப்டம்பர் 23ம் தேதி ஷூட்டிங்கைத் தொடங்குகிறோம். தேவி தியேட்டரில்தான் படத் தொடக்கம் நடைபெறுகிறது என்றார்.

தொடக்க விழாவின்போது, விக்ரம், ஷ்ரியா இடம் பெற்ற டிரைலரையும் போட்டுக் காட்டினார்கள்.

படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இப்படத்தில் விக்ரம் 5 வேடங்கள் போடுகிறார். அதில் ஒன்று பொம்பளை வேடம். இதற்காக சில சிறப்பு மேக்கப் ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம்.

ஹய்யோ! கேட்கவே 'கிளுகிளுப்பா' இருக்கே, சீக்கிரமே வாப்பா கந்தசாமி!

Read more about: guinness book thanu kandasamy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil