ரசிகர்களே ப்ளீஸ் பெயரை கெடுத்துடாதீங்க.. ஃபேன்ஸை அஜித் எப்படி கன்ட்ரோல் செஞ்சிருக்கார் பாருங்க
சென்னை: அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் ஏகே கார் ரேஸிலும் பிஸியாக இருக்கிறார். ஸ்பெயினில் நடக்கவிருக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களை அவர் கட்டுப்படுத்திய விதம் குறித்தும் அவர்களிடம் அவர் பேசிய ஆடியோவும் ட்ரெண்டாகியிருக்கிறது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்த அஜித் கார் ரேஸிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்தியாவை ரெப்ரெசண்ட் செய்யும் விதமாக அவர் செயல்படுவது பெரிய பாராட்டை பெற்றுவருகிறது. அண்மையில்கூட பத்மபூஷன் விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஏகே இப்போது ரேஸில் அதிக கவனம் செலுத்துவருவதால் அந்த விளையாட்டு மீது ரசிகர்களுக்கு அதிக கவனம் திரும்ப வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்: பல வருடங்களுக்கு முன்பே அவர் ரேஸில் கலந்துகொண்டவர்தான். ஆனால் அப்போதெல்லாம் சினிமா, ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறினார். இதனால் சினிமா கரியரும் பாதிக்கப்பட்டது, அவருக்கு விபத்துக்களும் ஏற்பட்டன. ஆனால் இந்த முறை தெளிவாக செய்திருக்கிறார். துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொள்வதற்காகத்தான் அவர் ஒரே நேரத்தில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் முடிவு: அதுமட்டுமின்றி ரேஸிங் நடக்கும் காலகட்டத்தில் சினிமாவில் கண்டிப்பாக நடிக்கமாட்டேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அவரது இந்த முடிவின் காரணமாக அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கண்டிப்பாக குறையலாம். அதேசமயம் இன்னொரு துறையில் சாதிப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று ரசிகர்கள் வழக்கம்போல் அவரை விட்டுக்கொடுக்காமல் பேசிவருகிறார்கள்.
ஏகேவை மொய்க்கும் கூட்டம்: வெளிநாடுகளில் இப்போது கார் ரேஸிங்கில் கலந்துகொள்ளும் அஜித்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அதிக அளவு கூடுகிறது. அவர்களுடன் முடிந்த அளவு புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார். அவர்கள் ஏதேனும் அத்துமீறி நடந்துகொண்டாலோ, சத்தம் போட்டு தொந்தரவு செய்தாலோ அவர்களை விரல் நுனியிலும் ஒரு பார்வையிலும் கட்டுப்படுத்துகிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ரேஸ் ஓட்ட அவர் சென்றபோது அதிக அளவு கூடிய கூட்டத்தை அவர் கன்ட்ரோல் செய்தபோது பேசிய ஆடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித் பேசியது: அவர் ரசிகர்களிடம், "எனக்கு நீங்கள் நல்ல பெயரை வாங்கி தர வேண்டாம். ஆனால் கெட்ட பெயரை பெற்றுக்கொடுக்காமல் இருங்கள் போதும். உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. நீங்கள் என்னை ரொம்பவே லவ் செய்கிறீர்கள். நானும் உங்களை லவ் செய்கிறேன். ஆனால் அந்த அன்பை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது என்னவென்றால் கண்ணியமாக நடந்துகொள்வதுதான்.
அதை கெடுத்துடாதீங்க: ஒவ்வொரு பேட்டியிலும் என்னுடைய ரசிகர்கள் ரொம்பவே கண்ணியமானவர்கள் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். அந்தப் பெயரை காப்பாற்றுங்கள். ப்ளீஸ் இதை என்னுடைய அன்பான கட்டளையாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் உங்களை நம்பலாமா; நிம்மதியாக நான் போய் ரேஸ் ஓட்டலாமா" என்றிருக்கிறார். ஏகேவுக்கு எவ்வளவு பக்குவம் பாருங்க.


Click it and Unblock the Notifications











