twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயனுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமிது... 'கனா'வில் அது பலித்துவிட்டது!

    கனா படத்திற்கு திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    |

    Recommended Video

    கனா படத்திற்கு அதிகரித்துள்ள தியேட்டர்களின் எண்ணிக்கை- வீடியோ

    சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்துள்ள கனா படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    மகளிர் கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை மையமாக வைத்து சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

    இந்த படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்துடன் மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், அடங்கமறு, கேஜிஎப் ஆகிய ஐந்து படங்கள் வெளியாகின. இதனால் கனாவிற்கு குறைந்த அளவே தியேட்டர்கள் கிடைத்தன.

    கனாவுக்கு வரவேற்பு

    கனாவுக்கு வரவேற்பு

    கனா படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தற்போது இந்த படத்துக்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை படத்தின் இணை தயாரிப்பாளர் கலையரசு உறுதிபடுத்தியுள்ளார்.

    பாராட்டப்படுவது மகிழ்ச்சி

    பாராட்டப்படுவது மகிழ்ச்சி

    இதுகுறித்து அவர் கூறியதாவது, " எங்கள் தயாரிப்பான "கனா" எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வணிக வெற்றியை விட, தியேட்டர்களில் தங்கள் படங்களை ரசிகர்கள் முழுமையாக அனுபவிப்பதை பார்ப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.

    ரசிகர்களின் பல்ஸ்

    ரசிகர்களின் பல்ஸ்

    ரசிகர்களின் பல்ஸை அருண்ராஜா காமராஜ் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டன.

    தியேட்டர்கள் அதிகரிப்பு

    தியேட்டர்கள் அதிகரிப்பு

    ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும்போது, வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக கருதப்படும். ஆனால் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு திரையிடலுக்காக எங்களை அணுகுவதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், ரசிகர்களின் வாய்வழி செய்தி மூலம் மிகப்பெரிய விளம்பரமாகி, திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இன்னும் நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க இது ஊக்கமாக இருக்கிறது" என்றார்.

    தொட்டதெல்லாம் பொன்னாகும்

    தொட்டதெல்லாம் பொன்னாகும்

    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து மாஸ் ஹீரோவாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இது பொற்காலம். முதல்முறையாக அவர் தயாரித்துள்ள படத்துக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதை, பார்க்கும் திரைத்துறையினர், சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது என புகழ்கின்றனர்.

    English summary
    The number shows have been increased for Kanaa movie, which is a Siva Karthikeyan production.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X