twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சொன்னா புரிஞ்சிக்கங்க... டிடிஎச்-ஆல் தியேட்டர்களுக்கு பாதிப்பு வராது - கமல் விளக்கம்

    By Shankar
    |

    Kamal
    சென்னை: விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுவதால் எந்த பாதிப்பும் வராது என்பதை தியேட்டர்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

    விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடும் முடிவை கமல் கைவிட வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கோரி வருகின்றனர்.

    ஆனால் அவர்கள் கோரிக்கையை கமல் ஏற்கவில்லை. டி.டி.எச்.சில் விஸ்வரூபம்' படத்தை ஒளிபரப்புவதில் உறுதியாக இருக்கிறார். இது தொடர்பான புரமோஷனல் வேலைகளையும் அவர் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்.

    இதையடுத்து தியேட்டர்களில் விஸ்வரூபம்' படத்தை திரையிடுவது இல்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை, மதுரை, கோவையில் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆதரவு திரட்டினர். அடுத்து திருச்சியில் இக்கூட்டம் நடக்க உள்ளது.

    இதற்கிடையில் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய கமல் டி.டி.எச்.சில் 'விஸ்வரூபம்' படம் ஒளிபரப்பப்படுவது உறுதி. டி.டி.எச்.களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிடுவதால் தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ரூ. 95 கோடி பணத்தை போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அந்த பணத்தை திரும்ப எடுப்பதற்கு டி.டி.எச்.சில் படத்தை வெளியிடுவதுதான் எனக்குத் தெரிந்த ஒரே வழி. இந்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.

    English summary
    Kamal explained that the theaters will not affect due to the DTH release of Viswaroopam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X