»   »  தனுஷுக்கு மிகப் பெரிய ப்ளாப்-ஆக அமைந்துவிட்ட தொடரி! #Dhanush

தனுஷுக்கு மிகப் பெரிய ப்ளாப்-ஆக அமைந்துவிட்ட தொடரி! #Dhanush

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது தொடரி படம்.

பிரபு சாலமன் இயக்கத்தில் சத்யஜோதி தியாகராஜன் தயாரித்த படம் தொடரி. இதோ அதோ என வெளியாவதில் இழுத்துக் கொண்டிருந்த இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது.

Thodari becomes big flop in Dhanush career

ஆனால் படம் வெளியானதா என்றே யாருக்கும் தெரியாத வகையில்தான் இந்தப் படத்தின் ரிலீஸ் அமைந்தது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 350 அரங்குகளுக்கு மேல் வெளியான இந்தப் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிகளுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள்.

தனுஷ் ஒரு முன்னணி நடிகராக இருந்தும் அவர் படத்துக்கு வந்த ரசிகர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை பாக்ஸ் ஆபீசை கலக்கத்தில் அதிர வைத்துவிட்டது.

தமிழகத்தில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இந்தப் படம் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே மிக மோசமான தோல்விப் படம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது தொடரி.

தமிழகத்தில் இந்தப் படம் பெரிய தோல்வியைத் தழுவினாலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோ அஜீத் என்பதால் அந்தப் படத்தில் சரிக்கட்டச் சொல்வோம் என அமைதி காக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்.

English summary
Dhanush's Thodari becomes the biggest flop in his career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil