»   »  இயக்குநராகிறார் சிரஞ்சீவி

இயக்குநராகிறார் சிரஞ்சீவி

Posted By:
Subscribe to Oneindia Tamil


ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படம் படு கிராண்டாக உருவாகப் போகிறது. இந்தப் படத்தை சிரஞ்சீவியே இயக்கவுள்ளதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


25 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். அவரது 150வது படத்தை மிகப் பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை சிரஞ்சீவியே இயக்கவுள்ளார். அவர் டைரக்ஷனில் உருவாகப் போகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை தனக்கு உதவியாக நியமித்துள்ளார் சிரஞ்சீவி. பூபதி, வல்லரசு, கிருஷ்ணசாமி ஆகியோரே அவர்கள். இதில் பூபதி இயக்குநராகவும் இருக்கிறார்.

நிஜக் கதை ஒன்றைத்தான் இப்படத்தின் கதையாக்கியுள்ளனர். திரைக்கதை சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக சிரஞ்சீவியும் மற்றவர்களும் தீவிர கவனம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

முதலில் இப்படத்தை ஷங்கரை வைத்து இயக்கத் திட்டமிட்டிருந்தார் சிரஞ்சீவி. ஷங்கர் இயக்கிய சிவாஜி, ரஜினிக்கு 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடைசி நேரத்தில் தமிழ் இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களை துணைக்கு வைத்துக் கொண்டு தானே இயக்கி விட தீர்மானித்தாராம் சிரஞ்சீவி.

தற்போது குடும்பத்துடன் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. ஒரு வாரத்தில் ஹைதராபாத் திரும்புகிறார். வந்தவுடன் படம் குறித்த விவரங்களை வெளியிடவுள்ளாராம்.

தமிழ் சினிமாக்காரர்களின் திறமைக்கு மதிப்பளித்திருக்கும் சிரஞ்சீவியின் 150வது படம் ஓஹோவென வர வாழ்த்துவோம்!

Read more about: chiranjeevi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil