»   »  அன்பார்ந்த ரசிக பெருமக்களே: உங்கள் வாழ்த்தை எதிர்பார்த்து நிற்கும் விஷால்

அன்பார்ந்த ரசிக பெருமக்களே: உங்கள் வாழ்த்தை எதிர்பார்த்து நிற்கும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நானே தயாரித்து நடிக்கும் துப்பறிவாளன் பட வேலைகள் துவங்கிவிட்டன. உங்களின் வாழ்த்துக்கள் தேவை என நடிகர் விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கத்திச் சண்டை படத்தில் நடித்து வரும் விஷால் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார். படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது.


#Thupparivalan Vishal needs your wishes

இந்நிலையில் துப்பறிவாளன் படம் பூஜையுடன் சென்னையில் திங்கட்கிழமை துவங்கப்பட்டது. படத்தில் பிரச்சன்னாவும் உள்ளார். விஷாலுக்கு ஜோடியாக டோலிவுட்டின் முன்னணி நாயகி ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் பெரிய தொகையை சம்பளமாக கேட்டும் விஷால் ஷாக்காமல் கொடுத்துள்ளாராம்.


ஆரல் கொரெல்லி இசையமைக்கிறார். இந்நிலையில் படம் குறித்து விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


மிஷ்கின், பிரச்சன்னா, ஆரோல் கொரெல்லியுடன் என் சொந்த தயாரிப்பான துப்பறிவாளன் துவங்கியுள்ளது. உங்களின் வாழ்த்துக்கள் தேவை என தெரிவித்துள்ளார்.English summary
Actor Vishal tweeted that, 'Startd my nxt home prod VffVishal #Thupparivalan wit #mysskin sir wit Prasanna_actor ArrolCorelli.gna b an xciting one.need ya wishes.GB'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil