»   »  படப்பிடிப்புக்கு முன்பே தலைப்பு... எப்போதும் வழக்கத்தை மாற்றிக் கொள்ளாத ரஜினி!

படப்பிடிப்புக்கு முன்பே தலைப்பு... எப்போதும் வழக்கத்தை மாற்றிக் கொள்ளாத ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு தாங்கள் நடிக்கும் படங்களின் தலைப்புகளை அறிவிக்காமல் கடைசி வரை இழுத்தடிப்பது ஒரு போக்காகிவிட்டது. எதிர்ப்பார்ப்பை ஏற்றுகிறார்களாம்.

குறிப்பாக அஜித், விஜய் இருவரின் படங்களுக்கும் நீண்ட நாட்களுக்கு தலைப்பைச் சொல்லாமல் மௌனம் காப்பார்கள்.


Title before movie launch... Rajini never changes his style

ஆரம்பம், என்னை அறிந்தால் போன்ற படங்களின் தலைப்புகள் ட்ரைலர் வெளியாகும்போதுதான் வெளியில் தெரிய வந்தன. விஜய் நடிக்கும் 61வது படத்தின் தலைப்பு இன்னும் கூட வெளியாகவில்லை.


ஆனால் ரஜினி படங்களுக்கு எப்போதுமே படம் தொடங்குவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் தலைப்பு வெளியிடுவது வழக்கம். இந்த பாணியை எண்பதுகள் தொடங்கி இந்த காலா கரிகாலன் வரை கடைப் பிடிக்கிறார் ரஜினி.


ஆண்டுக்கு ஒரு படம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற முடிவை எடுத்த அண்ணாமலை காலத்திலும் கூட படம் தொடங்குவதற்கு முன்பே தலைப்பை அறிவித்துவிடுவார் ரஜினி.


பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கோச்சடையான், லிங்கா, கபாலி எல்லாமே படம் தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட தலைப்புகள்தான். அதே போல ஒருமுறை அறிவிக்கப்பட்ட தன் படத் தலைப்பை இதுவரை மாற்றியதில்லை ரஜினி.

English summary
For every movie, Rajinikanth is following his own style of announcing the title before movie launch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil