For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டாப் ஹீரோக்களின் சம்பள ஸ்டேட்டஸ்... லைக்ஸ், டிஸ்லைக்ஸ்!

  |

  அடடா... என ஆச்சர்யப்பட வைத்தது நம்ம ஹீரோக்களின் சம்பள பட்டியல். ஆமாம் பாஸ்... மார்க்கெட் வேல்யூவுக்கு இணங்க சம்பளத்தையும் குறைத்திருக்கிறார்கள். ஆனால் மார்க்கெட் இருக்கும் ஹீரோக்கள் பல மடங்கு ஏற்றியிருக்கிறார்கள்.

  நம்ம பேவரைட் ஹீரோக்களின் சம்பளம், மார்க்கெட் வேல்யூ, என்ன பலம், பலவீனம் என்பதை கோடம்பாக்க சந்துபொந்துகளில் அலைந்து ஆராய்ந்தோம். பெருமூச்சு விட்டபடியே படித்துக்கொள்ளுங்கள்.

  ரஜினி

  ரஜினி

  எத்தனை விஜய்கள், அஜீத்கள், சிவகார்த்திகேயன்கள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றுமே சூப்பர் ஸ்டார் நம்ம ரஜினிதான். கபாலி படத்துக்கு ரஜினி 70 கோடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். எந்திரன் 2 சம்பளம் நூறைத் தாண்டலாம். முன்பெல்லாம் படத்தின் லாபத்தில் ஒரு பங்கு ரஜினிக்கு போய்விடும். ஆனால் ஏன் ரிஸ்க் என்று சம்பளமாகவே வாங்கிகொள்கிறார்.

  லைக் - ஸ்டைல், மேன்லி லுக், உலகளவில் வற்றாத ரசிகர் வெள்ளம்

  டிஸ்லைக் - குடும்பம், கமிட்மெண்டுக்குள் சிக்கி கொள்வது.

  கமல் ஹாஸன்

  கமல் ஹாஸன்

  கமல்ஹாசன் படங்கள் எல்லாமே அவரது சொந்த தயாரிப்புதான். கமர்ஷியலாக அவரது மார்க்கெட் பெரிதாக இல்லைதான். வெளிப் படங்கள் என்றாலும் கமல் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் படத்தை முடித்து கொடுப்பார். தனது சம்பளமாக 40 கோடி வரை அதில் குறித்துக்கொள்வார் என்கிறார்கள்.

  லைக் - வெரைட்டியாக படங்கள் தருவது

  டிஸ்லைக் - கமர்ஷியல் ஃபார்முலா பிடிபடாதது

  அஜித்

  அஜித்

  ரஜினி, கமலுக்கு அடுத்து அஜித். எத்தனை தோல்வி தந்தாலும் ஓப்பனிங் கிங் என்றுமே அஜித் தான். காரணம் அவ(ர்)ரை நம்பும் ரசிகர்கள். முதல் மூன்று நாட்களின் வசூல் தான் தமிழ் சினிமாவையே நிர்ணயிப்பதால் அஜித் தான் இப்போதைக்கு வசூல் சக்ரவர்த்தி. சம்பள விஷயத்தில் இவரது ஃபார்முலாவை எல்லா ஹீரோக்களும் கடைபிடித்தால் நல்லது என்று கோலிவுட்டில் பேச்சு ஓடுகிறது. பாலிவுட் ஸ்டைலில் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு நடிக்கிறார். படம் முடிந்து நடக்கும் வியாபாரத்தை பொறுத்து ஷேர் வாங்கிகொள்கிறார். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய நெருக்கடி குறைகிறது.

  லைக் - இமேஜ், ஸ்க்ரீன் அப்பியரன்ஸ், ரசிகர்கள்

  டிஸ்லைக் - புரமோஷன்களுக்கு வர மறுப்பது, வெரைட்டியான படங்களை தவிர்த்து மாஸ் படங்களையே செலக்ட் செய்வது.

  விஜய்

  விஜய்

  ஏ,பி,சி எந்த செண்டரிலும் கலெக்‌ஷன் அள்ளுவது விஜய் படம். துப்பாக்கி, கத்தி போல வலுவான திரைக்கதை கிடைத்தால் கோலிவுட்டுக்கே மகா கொண்டாட்டம். துப்பாக்கியில் 20 ஐத் தொட்ட சம்பளம் கத்தியில் 30 ஐ தொட்டுவிட்டது. ஆனால் தாணுவின் நட்புக்காக தெறி படத்துக்கு 25 கோடி தான் வாங்கியிருக்கிறார்.

  லைக் - நல்ல ஸ்க்ரிப்ட் செலக்டர், டான்ஸ்

  டிஸ்லைக் - அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அரசியல் ஆசை, நடிப்பில் வெரைட்டி இல்லாதது.

  சூர்யா

  சூர்யா

  சிங்கம் 2 தான் 2013 தான் மெகா ஹிட். ஆனால் அஞ்சானும், மாஸும் சூர்யாவின் மார்க்கெட்டுக்கு பின்னடைவுகள். 24 முதலுக்கு மோசமில்லாத படம். சிங்கம்3 இல் விட்டதைப் பிடித்துவிடுவார் என நம்புகிறார்கள். நாம் பார்த்த ஹீரோக்கள் அனைவரையும் விட அதிகம் சம்பாதிப்பவர் சூர்யா தான். சம்பளமாக 20 கோடியும் தெலுங்கு ரைட்ஸும் வாங்கிகொள்கிறார். எதிர்பார்ப்பைப் பொறுத்து தெலுங்கு ரைட்ஸ் எகிறும்.

  லைக் - எல்லா படங்களையும் கலந்துகட்டி தருவது, பிரச்னைகளில் சிக்காதது.

  டிஸ்லைக் - அஜித், விஜய் அளவுக்கு ரசிகர் வட்டம் இல்லாமல் இருப்பது.

  தனுஷ்

  தனுஷ்

  தோல்வியடையும் படம் என்றாலும் அதில் தனுஷின் நடிப்பு பிரமாதமாக பேசப்படும். மைனஸான இதை ப்ளஸ் என நினைத்துகொள்வது தான் தனுஷ் செய்யும் தவறு. மார்க்கெட் ஏறி ஏறி இறங்குகிறது. சம்பளம் மாரி வரை 15 கோடி தான். அடுத்த படத்திலிருந்து 18 ஆக்க முடிவு செய்திருக்கிறார்.

  லைக் - அபார நடிப்பு, கமர்ஷியலாக சிக்ஸர் அடிக்கும் படங்களை தேர்வு செய்தல்.

  டிஸ்லைக் - ஓவர் பில்டப்களை வலுக்கட்டாயமாக படங்களில் சேர்ப்பது.

  சிவகார்த்திகேயன்

  சிவகார்த்திகேயன்

  சிவகார்த்திகேயன் இதுவரை தோல்வியே பார்க்காமல் பயணிக்கிறார். லேட்டாக வந்தாலும் ரஜினிமுருகன் வசூலில் குறை வைக்கவில்லை. அஜித், விஜய்க்கு நிகராக ஓப்பனிங்கும், ஃபேமிலி ஆடியன்ஸும் இருக்கிறது. காக்கி சட்டையில் 3 கோடியைத் தொட்ட சிவா சம்பளம் இப்போது பதினைந்தைத் தொட்டிருக்கிறதாம்.

  லைக் - பிராமிஸிங் ஆக்டர். மாஸ் ஓப்பனிங். எண்டெர்டெய்னர்

  டிஸ்லைக் - காமெடி பாதையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது.

  விக்ரம்

  விக்ரம்

  இத்தனை வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் கூட விக்ரமின் மார்க்கெட் உடன் இணையும் இயக்குநர்களை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. காரணம் இடையில் சில தவறான படங்களைத் தேர்வு செய்ததுதான். பத்து எண்றதுக்குள்ள படத்தில் 20 கோடியைத் தொட்டுவிட்டார். ஐ ஹிட் அடித்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆகாதது வருத்தமும் பின்னடைவும்தான். பத்து எண்றதுக்குள்ள படுதோல்வி அடைந்ததால் நாளை வெளியாகும் இருமுகன்தான் விக்ரமின் கேரியரை முடிவு பண்ணும்.

  லைக் - கடின உழைப்பு

  டிஸ்லைக் - ஒரு படத்தில் இரண்டு, மூன்று ஆண்டுகள் என சிக்கி கொள்வது.

  கார்த்தி

  கார்த்தி

  அலெக்ஸ் பாண்டியனில் இருந்து வரிசையாக துரத்திய தோல்விகளை மெட்ராஸ், கொம்பன், தோழா மூலம் விரட்டியிருக்கிறார். 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

  லைக் - காமெடி கலந்த நடிப்பு
  டிஸ்லைக் - கதை விஷயத்தில் அதிகம் தலையிடுவது.

  விஷால்

  விஷால்

  ஆரம்பத்தில் ஹிட் அடித்து இடையில் சறுக்கியவர் பாண்டிய நாடு படத்துக்கு பிறகு அடித்து ஆடுகிறார். மார்க்கெட் வேல்யூ 20 கோடியைத் தொட்டிருக்கிறது. நல்ல கமர்ஷியல் இயக்குனர் இணையும்போது அதிகரிக்கும். போட்டி போட்டு பெரிய படங்களுடன் வெளியிட்டு ஆப்பை தேடி வாங்கிகொள்கிறார். சம்பளம் 8 கோடியாக அதிகரித்துள்ளது.

  லைக் - படங்களை சரியாக தேர்வு செய்வது

  டிஸ்லைக் - சங்க விவகாரத்தில் பலரையும் பகைத்துக்கொண்டது, தயாரிப்பாளர்களுடன் தொடர் மோதல்

  சிம்பு

  சிம்பு

  நீண்ட நாள் கழித்து வந்த வாலு சிம்புவை தூக்கி விட்டது. இதுவரை 10 கோடியே தொடாத சிம்புவின் மார்க்கெட் 15 கோடியை தொட்டிருப்பது நல்ல முன்னேற்றம் இதை தக்க வைத்துக்கொள்வது சிம்புவின் பொறுப்பு. 4 கோடி
  வாங்கிகொண்டிருந்த சிம்புவின் சம்பளம் இப்போது 6 வரை உயரும் என்கிறார்கள்.

  லைக் - ரசிகர்கள் வட்டம்

  டிஸ்லைக் - படங்கள் தாமதமாவது.

  ஆர்யா

  ஆர்யா

  சொந்த கம்பெனி ஆரம்பித்ததில் இருந்தே தோல்விகள் துரத்தியடிக்கிறது. வெளி கம்பெனிகளில் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தாலும் புரமோஷன்களில் கோட்டையை விடுகிறார்கள். 5 கோடியைத் தொட்டிருக்கிறது சம்பளம்.

  லைக் - நஷ்டத்தில் பங்கு போட்டு தயாரிப்பாளரை வாழவைப்பது.

  டிஸ்லைக் - சும்மாவே வந்து நின்று செல்வது. கொஞ்சம் நடிங்க பாஸ்!

  விஜய் சேதுபதி

  விஜய் சேதுபதி

  சரசரவென ஏறிய கிராஃப் அதைவிட வேகமாக இறங்கியது. ஆனால் நானும் ரவுடிதான், சேதுபதி படங்கள் விஜய் சேதுபதியை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 லிஸ்டில் சேர்த்திருக்கிறது. 15 கோடி வரை இருந்த மார்க்கெட் இப்போது 10 - 12 வரை சரிந்திருக்கிறது. சம்பளம் நான்கு கோடி. இப்போது அட்வான்ஸ் கொடுத்தால் 2018இல் தான் கால்ஷீட் கிடைக்கும். அவ்ளோ பிஸி.

  லைக் - கதை செலக்‌ஷன்

  டிஸ்லைக் - இன்னும் ஒரு கமர்ஷியல் ஹிட் கூட கொடுக்காதது.

  English summary
  Here is the list of top heroes salary, plus and minuses of Kollywood.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X