»   »  சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன ஹீரோயின்கள் யார் யார்?

சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன ஹீரோயின்கள் யார் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று பிரம்மாண்டமாக நடந்த ரெமோ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில்சிவகார்த்திகேயன் பேசும்போது ஒரு இடத்தில் லேசான வருத்தம் தெரிந்தது.

அது ஹீரோயின்கள் பற்றிப் பேசும்போது...


"இந்த படத்துக்காக பெரிய ஹீரோயின்கள் சிலரை அப்ரோச் பண்ணினோம். அவங்கள்லாம் முடியாதுன்னுட்டாங்க. அவங்களுக்கெல்லாம் பெரிய தேங்ஸ் சொல்லிக்கிறேன். ஏன்னா கீர்த்தி சுரேஷ் இந்த ரோலுக்கு அவ்வளவு ஆப்ட் ஆகியிருக்காங்க...'' என்று சொன்னார்.


Top heroines say No to Sivakarthikeyan for Remo

தான் காதலிக்கும் பெண்ணை அடைவதற்கு ஒரு பையன் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறான் என்பதுதான் ரெமோ கதையே...


அப்படி இருக்கும்போது அந்த ஹீரோயின் சிவகார்த்திகேயனைவிட சற்று பெரிய ரேஞ்சில் இருந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே தான் பெரிய ஹீரோயின்களாகப் பார்த்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் முடியாது என்று சொல்லவே கீர்த்தி சுரேஷையே ஹீரோயினாக்கி விட்டார்கள்.


சிவகார்த்திகேயன் குறிப்பிட்ட அந்த ஹீரோயின்கள் ஸ்ருதிஹாசனும், சமந்தாவும் தான் என்கிறார்கள்.


அதுக்கென்ன சிவா அடுத்த படத்துலதான் உங்க ஃபேவரிட் ஹீரோயின் நயன் கூடவே ஜோடி சேர்ந்துட்டீங்கள்ல...?!


English summary
In Remo first look launch event, Sivakarthikeyan says that some of the top heroines have refused to accept the lead lady role in the movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil