டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கும் ஹீரோயின் பஞ்சாயத்து இல்லை.. யாருன்னு பாருங்க!

சென்னை: Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, "லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி" படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

Tourist Family Director Abishan Jeevinth turns hero and Anaswara Rajan onboard as his pair
Photo Credit:

இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இப்படத்தில் நாயகனாக களமிறங்குகிறார். அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம். இளைஞர்களின் கனவுகன்னியாக கொண்டாடப்படும் நாயகி அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

Tourist Family Director Abishan Jeevinth turns hero and Anaswara Rajan onboard as his pair
Photo Credit:

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றுகிறார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

பிரதீப் ரங்கநாதன், கேபிஒய் பாலா, சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலருக்கும் ஹீரோயின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தில் அவருக்கு அனஸ்வரா ராஜன் ஜோடியாக நடிப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நல்ல படத்தைக் கொடுத்த உடனே ஹீரோவாக இயக்குநர்கள் செட்டில் ஆகி வருவதும் புது டிரெண்டாக மாறிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X