Don't Miss!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
மின்னல் முரளி “டொவினோ தாமஸுக்கு இன்று பிறந்தநாள்… இணையத்தில் குவியும் வாழ்த்து !
கேரளா : டொவினோ தாமஸ், இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
என்ன சொல்றீங்க.. ஒவ்வொரு சீசனில் இருந்தும் 4 பேரு வராங்களா? பிக் பாஸ் ஒடிடி பராக்!
அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

டொவினோ தாமஸ்
மலையாளத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடிப்பவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் டொவினோ தாமஸ். அவர் 2012-ம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பிரபுவின்டே மக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

சிறந்த நடிகர்
முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏபிசிடி, ஆகஸ்ட் கிளப், 7வது நாள், என்னு நிண்டே மொய்தீன், கோதாரா, யூ டூ ப்ருடஸ் போன்ற திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். டோவினோ தாமஸ் தனது அட்டகாசமான நடிப்பால் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த டொவினோ தாமஸ் மாயநதி திரைப்படத்தில் சிறப்பாக நடித்து பிலிம்பேரின் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார்.

தயாரிப்பாளர்
நடிகராக வெற்றி பெற்ற டோவினோ , 2020 ஆம் ஆண்டில், கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார், அதில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

மாரி 2
மலையாள திரையுலகில் ஜொலித்துக்கொண்டு இருந்த டோவினோ தாமஸ் தனுஷ் , சாய் பல்லவி நடித்த மாரி 2 திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

மின்னல் முரளி
ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடித்த மின்னல் முரளி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சூப்பர் ஹீரோ கதைக்களத்தைக் கொண்ட இந்த திரைப்படத்தை மிகப்பெரியஅளவில் கொண்டாடினார்கள்.

இன்று பிறந்தநாள்
இந்நிலையில்,டொவினோ தாமஸ் இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும் சமூகவலைத்தள பக்கத்தில் வாழ்த்து கூறிவருகின்றனர். அவரின் தீவிர ரசிகர்கள் #TovinoThomas #HBDTovinoThomas #MinnalMuraliயை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.