»   »  ''என் தங்கச்சி த்ரிஷா''... டி.ராஜேந்தர் மாதிரி உருகும் ஆர்யா!

''என் தங்கச்சி த்ரிஷா''... டி.ராஜேந்தர் மாதிரி உருகும் ஆர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையுலகில் உறவுகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். இன்று காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் நாளை அண்ணன் தங்கை உறவு கொண்டாடுவது சகஜம்.

ஆர்யாவும், த்ரிஷாவும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்கள். இருவரும் ‘சர்வம்' என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

ஆர்யா பிரியாணி கொடுத்த நாயகிகளுள் த்ரிஷாவும் ஒருவர். மற்ற நடிகைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது போலத்தான் த்ரிஷாவுடனும் ஆர்யா பழகி வந்தார்.

Trisha is my sister, says Arya

இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. இருவரையும் இணைத்து சில காலம் கிசுகிசுக்களும் வந்தன. இந்த நிலையில், ‘பெங்களூர் நாட்கள்' படவிழாவில், த்ரிஷாவை தனது தங்கை என்று ஆர்யா குறிப்பிட்டார்.

‘‘த்ரிஷா எனக்குத்தான் தங்கை. ஆனால் ராணாவுக்கும் அதே உறவு என்று சொல்ல மாட்டேன்," என்றார்.

இதை ஆமோதித்த த்ரிஷா, "ஆர்யா நல்ல மனிதர். அவர் உடனிருந்தால் பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வு வரும்," என்றார்.

English summary
Actor Arya says that Trisha is like her sister and he is in good terms with her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil