»   »  த்ரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி... சொல்வது ஆர்யா

த்ரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி... சொல்வது ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி என்று நேற்று நடந்த பெங்களூர் நாட்கள் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா கூறியிருக்கிறார்.

ராணா, பாபி சிம்ஹா, ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பார்வதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பெங்களூர் நாட்கள் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.


இதில் நடிகர் ராணாவிடம் த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் இடையேயான உறவு பற்றிக் கூறுங்கள்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.


Trisha Like My Sister says Arya

இதற்கு நடிகர் ராணா பெங்களூர் நாட்கள் படத்தில் ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிதிருக்கின்றனர் அவர்களைப் பற்றி கேளுங்கள் என்று பதில் கூறினார்.


அதோடு நில்லாமல் த்ரிஷா பற்றி ஆர்யாவிடம் கேளுங்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் ஆர்யாவை கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்தார் ராணா.


உடனே சுதாரித்துக் கொண்ட ஆர்யா த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி ஆனால் ராணாவுக்கு என்ன மாதிரி என்று நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்.


ஆர்யாவின் இந்தப் பதிலுக்கு ராணா உட்பட அங்கிருந்த அனைவருமே சிரிக்க விழா அரங்கம் சிரிப்பலைகளால் அதிர்ந்தது. ஆர்யா இப்படி சொன்னது த்ரிஷாவுக்கு தெரிஞ்சா அவங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும்?

English summary
Bengalore Naatkal Press Conference Held Yesterday. This Conference Actor Arya Said "Trisha Like My Sister".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil