»   »  முதல் முறையாக "வெளி நடிப்பு" செய்யப் போகும் உதயநிதி!

முதல் முறையாக "வெளி நடிப்பு" செய்யப் போகும் உதயநிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு கல் ஒரு கண்ணாடி தொடங்கி அடுத்தடுத்து வரவிருக்கும் மனிதன் மற்றும் பெயர் சூட்டப்படாத சுசீந்திரன் படம் வரை சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

காரணம் வெளி தயாரிப்பு நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்காமல் அல்ல... படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் இமேஜுக்கு பங்கம் வராதல்லவா... அந்த நினைப்புதான்.

Udhayanidhi signs with Thenandal Films

ஆனால் இப்போது முதல் முறையாக வெளி நிறுவன தயாரிப்பு ஒன்றில் நடிக்கிறார் உதயநிதி. அந்த நிறுவனம் உதயநிதிக்கு ரொம்பவே நெருக்கமான தேனாண்டாள் பிலிம்ஸ்.

இதுவரை ஏராளமான புதிய படங்களை வெளியிட்டு வந்த தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் இயக்குநர், நாயகி உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்கவிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

English summary
Actor Udhayanidhi Stalin is going to sign his first movie producing by an outside production company.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil