Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போலீஸ் உடையில் கம்பீரமாக காட்சியளித்த உதயநிதி... நெஞ்சுக்கு நீதி பட போட்டோஸ் !
சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
ஜீ ஸ்டியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
2021ல்
அதிகம்
தேடப்பட்ட
இசைக்கலைஞர்கள்…
ட்விட்டர்
வெளியிட்ட
டாப்
5
லிஸ்ட்
!
உதயநிதி அரசியலுக்குள் நுழைந்து எம்எல்.ஏவான பிறகு நடிக்கும் படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ஆர்ட்டிக்கில் 15
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 2019ம் ஆண்டு வெளியாகி பலரின் பாராட்டை பெற்ற திரைப்படம் தான் ஆர்ட்டிக்கில் 15. சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையை அப்பட்டமாக இப்படம் தோலுத்து காட்டியது. இப்படம் வசூலை வாரிக்குவித்தது சாதனை படைத்தது.

நெஞ்சுக்கு நீதி
ஆர்ட்டிக்கில் 15 திரைப்படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தை கனா திரைப்படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டைரக்டர் அருண்ராஜா காமராஜ், ஆர்ட்டிக்கில் 15 திரைப்படத்தை போல அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய திரைக்கதை எழுதி இந்த திரைப்படத்தை இயக்கி வருறிர்.

போலீஸ் அதிகாரியாக
உதயநிதி இதுவரை நடித்திராத போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார். உதயநிதிக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, 'ராட்சசன்' சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வைரல் போஸ்டர்
இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

வைரல் போட்டோ
இந்நிலையில், இத்திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ள அதில் மிகவும் மிடுக்கான போலீஸ் உடையில் உதயநிதி ஸ்டாலின் காட்சி அளிக்கிறார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது.