»   »  புதுப் படம் புத்தம் புதிய கூட்டணி.. கலக்கும் உதயநிதி

புதுப் படம் புத்தம் புதிய கூட்டணி.. கலக்கும் உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரும், முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவருமான நடிகர் உதயநிதி தனது புதிய படத்திற்கான பூஜையை இன்று நடத்தினார்.

இதுவரை காமெடி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது கெத்து படத்தின் மூலம் ஆக்க்ஷன் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் முற்றிலும் பழைய கூட்டணியை விட்டு ஒதுங்கி புதிய நபர்களுடன் இணைந்து இன்று தனது புதிய படத்திற்கு பூஜை போட்டிருக்கிறார் உதயநிதி.

படத்தின் பூஜை மற்றும் நடிப்பவர்கள் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

உதயநிதி

உதயநிதி

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தனது திரை வாழ்வைத் துவங்கிய உதயநிதி, தான் தயாரித்த படங்களில் சிறுசிறு வேடங்களில் தோன்றி தனது நடிப்பு ஆசையையும் வெளிபடுத்தினார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி

2012 ம் ஆண்டில் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளியானது. படத்தின் நாயகனாக உதயநிதி அறிமுகமாகிய இந்தப் படத்தை சந்தானத்தைக் கொண்டே விளம்பரம் செய்தனர், அதற்கேற்றவாறு படத்தை வெற்றிப் படமாக மாற்றி தாங்கிப் பிடித்ததில் சந்தானத்தின் பங்கே அதிகம் இருந்தது.

அடுத்தடுத்து சொதப்பிய படங்கள்

அடுத்தடுத்து சொதப்பிய படங்கள்

உதயநிதியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகிய இது கதிர்வேலன் காதல் மற்றும் நன்பேண்டா போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் பயங்கரமாக சொதப்பியது. எனவே தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கெத்து திரைப்படத்தில் ஆக்ஷன் பாதைக்கு திரும்பியிருக்கிறார் உதயநிதி.

புதிய படத்தின் பூஜை

புதிய படத்தின் பூஜை

இந்நிலையில் தனது புதிய படத்திற்கான பூஜையை இன்று துவக்கியிருக்கிறார், என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

2 வது முறையாக ஹன்சிகாவுடன்

2 வது முறையாக ஹன்சிகாவுடன்

இந்தப் படத்தின் மூலம் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைத் தொடர்ந்து மீண்டும் 2 வது முறையாக ஹன்சிகாவுடன் ஜோடி சேர்கிறார் உதயநிதி.

புதிய கூட்டணி

இதுவரை சந்தானத்துடன் இணைந்து நடித்து வந்த உதயநிதி தற்போது விவேக்குடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக நடிகர் பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் உதயநிதி. மேலும் இந்தப் படத்தைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்து இருக்கிறார் உதயநிதி.

ஹாரிஸ் ஜெயராஜிற்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன்

ஹாரிஸ் ஜெயராஜிற்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன்

ஒரு கல் ஒரு கண்ணாடி தொடங்கி வரிசையாக தனது படங்களுக்கு இசையமைத்து வந்த ஹாரிஸ் ஜெயராஜிற்குப் பதிலாக இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்திருக்கிறார் உதயநிதி.

இது ஆக்க்ஷன் படமா இல்ல காமெடிப் படமா உதயநிதி சார்..

English summary
Today Actor cum Producer Udhayanidhi Stalin Started His Next Project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil