»   »  லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாருக் கான் தடுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்!

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாருக் கான் தடுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாரூக்கான் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒவ்வொரு முறை அமெரிக்காவுக்குப் போகும் போதெல்லாம் அங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சில மணி நேரம் காக்க வைத்து அனுப்புவது வழக்கமாகிவிட்டது.

US envoy apologise for detained SRK at LA airport

கடந்த 2009-ம் ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு சென்றபோது நியூ ஜெர்சி விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அடுத்து கடந்த 2012-ம் ஆண்டும் நியூயார்க் விமான நிலையத்தில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் அவரை 2 மணிநேரம் காக்கவைத்து, தீவிர விசாரணைக்கு பின்னர் அனுமதித்தனர்.

இந்நிலையில், தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தன்னை குடியுரிமைத்துறை அதிகாரிகள் மீண்டும் காக்க வைத்த சம்பவத்தை ஷாருக்கான் தனது ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தினார்.

'உலகம் இன்று இருக்கும் நிலையில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை நான் முழுமையாக புரிந்து வைத்துள்ளேன். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மதிப்பும் அளிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவுக்கு வரும்போதும் இங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளால் காக்க வைக்கப்படுவது வேதனைக்குரியது.

ஆனால், இந்தமுறை காத்திருந்த நேரத்தில் சில போக்கிமோன்களை பிடிக்க முடிந்தது,' என வேதனையாகக் கிண்டலடித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக் கானை லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் நிறுத்திவைத்த சம்பவத்துக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதர் ரிச்சர்ட் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது விவகாரத்தில் அக்கறை எடுத்து கொண்டமைக்காக ரிச்சர்ட் வர்மாவுக்கு ஷாருக் கான் நன்றி தெரிவித்துள்ளார்.

English summary
The US Ambassador for India Richard Varma has apologised for what happened to Shahrukh Khan at Los Angeles airport.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil