»   »  வாலு படத்தில் வாத்தியாரு பாட்டு.. 4 கெட்டப்பில் சிம்பு.. கூடவே ஹன்சிகாவும்!

வாலு படத்தில் வாத்தியாரு பாட்டு.. 4 கெட்டப்பில் சிம்பு.. கூடவே ஹன்சிகாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு விதமான பிரச்சினைகளால் மிகவும் பாதிப்புக்கு உள்ளான வாலு படம், தடைகளைக் கடந்து வரும் ஜூலை 17 ம் தேதி அன்று உலகெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து விட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர் வாலு குழுவினர்.

Vaalu : Simbu Playing 4 Getup’s

வாலு படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் படம் பிடிக்க வேண்டியிருந்தது, ஹன்சிகா இல்லாமல் படம்பிடிக்க முடியாமல் சிக்கலில் இருந்தனர் வாலு படப்பிடிப்புக் குழுவினர். தற்போது ஹன்சிகாவின் கால்ஷீட் கிடைத்து விட்டதால் பம்பரமாகச் சுழன்று, பாடலைப் படம்பிடித்து வருகிறார் இயக்குநர் விஜய் சந்தர்.வாத்தியாரு என்று தொடங்கும் அந்தப் பாடலில் சிம்பு 4 விதமான வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறாராம். எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் மற்றும் சிம்பு என 4 கெட்அப்புகளில் இந்தப் பாடலில் நடிக்கிறார் சிம்பு.


எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கெட்அப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன, தற்போது அஜீத் தோற்றத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. மேலும் இதனைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டு இருக்கிறார் சிம்பு.


English summary
Simbu Playing 4 getup’s In Vaalu movie. He is Acting M.G.R, Sivaji, Ajith And Simbu Getup’s In Vaalu Movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil