»   »  ரம்பா, ஊர்வசி, மேனகா...வடிவேலு

ரம்பா, ஊர்வசி, மேனகா...வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சொர்க்கத்தில் இருக்கிறார் வடிவேலு! அவசரப்பட்டு வேறு எந்த யோசனைக்கும் போய் விடாதேள். மூன்று ஹீரோயின்களுடன் முக்கி முக்கி நடித்து வருகிறார் வைகைப் புயல் வடிவேலு.

இம்சை அரசனுக்குப் பிறகு முழு நீள ஹீரோவாக இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற படத்தில் நடிக்கிறார் வடிவேலு. அய்யாவுக்கு இதில் மூன்று ஹீரோயின்கள். ஆரம்பத்தில் ஹீரோயின்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பின்னர் படத் தயாரிப்பு குறித்து குழப்பம் நிலவியது.

எல்லாம் சரியாகி இப்போது இந்திரலோகத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் மூன்று விதமான கேரக்டர்களில் நடிக்கிறார் வடிவேலு. குத்துப் பாட்டுக்களில் குபேரியாக கொடி நாட்டிக் கொண்டிருக்கும் சுஜா ஒரு ஜோடியாக வருகிறார். இவருக்கு இந்திரலோகத்தின் ஊர்வசி கதாபாத்திரம்.

தீபு மேனகையாக மயக்க வருகிறார். ரொம்ப காலத்திற்குப் பிறகு தீபுவுக்குக் கிடைத்துள்ள படம் இது. இன்னொருவர் தீத்தா சர்மா. இவர் லண்டனைச் சேர்ந்த மயக்கும் மாடல் அழகி. ரம்பா வேடத்தில் இவர் நடிக்கிறார்.

சமீபத்தில் சொர்க்கம் போன்று போடப்பட்ட செட்டில், தீத்தாவும், வடிவேலுவும் கட்டி உருண்டு களேபரமாக நடித்த காட்சியைப் படமாக்கினர்.

மூன்று பேருமே கவர்ச்சியாக நடிப்பதற்கு எந்தத் தடையும் சொல்லவில்லை என்பதால் படம் முழுக்க ஜீராவும், ஜாமூனுமாக தித்திப்பாக இருக்கப் போகிறதாம்.

தம்பி ராமையா படத்தை இயக்குகிறார். படத்தில் ஒரு காட்சியில் இந்திரலோகத்தில் ஹீரோ வடிவேலுவுடன் மூன்று ஹீரோயின்களும் இணைந்து ஆடிப் பாடும் காட்சி படத்திற்குப் பக்க பலமாக இருக்குமாம்.

படம் குறித்து வடிவேலுவிடம் போய் கேட்டபோது, அண்ணே, சினிமாவுக்கு நான் வந்தபோது எப்படி இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் நிறைய மாற்றம் இருக்குண்ணே. இப்படிப்பட்ட நிலைக்கு வருவேன்னு, என்னால கற்பனை செஞ்சு கூட பார்க்க முடியவில்லை.

இங்க பாருங்க, எனக்காக 3 கோடியைக் கொட்டி செட்டு போட்ருக்காங்க. என்னைப் போன்ற காமெடியன்களுக்கு இது நிஜமாவே பெரிய மரியாதைண்ணே என்று நெக்குருகி, நெகிழ்ந்து பேசினார்.

இப்படத்தின் செட்டுகளை தோட்டா தரணிதான் போட்டுள்ளாராம். இந்திரலோகம் போன்ற செட் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்கிறார்கள்.

இந்திரலோகம் செட்டைப் போட ரூ. 3 கோடி செலவாகும் என்று கூறியபோது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயங்காமல் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

பார்த்து படம் எடுங்கய்யா, தயாரிப்பாளரை நரக வேதனையில் தள்ளி விட்டுடாதீங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil