மாரீசன் படத்தைத் தொடர்ந்து பிரபுதேவாவுடன் இணைந்த வடிவேலு.. துபாயில் தூள் கிளப்பிய படபூஜை!

சென்னை: இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு இணையும் புதிய படத்தின் பட பூஜை இன்று துபாயில் கோலாகலமாக போடப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள நிலையில், பட பூஜையும் துபாயிலேயே நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காதலன், எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், காதலா காதலா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், ராசையா உள்ளிட்ட பல படங்களில் பிரபுதேவா மற்றும் வடிவேலும் காமெடி கூட்டணி ஏகப்பட்ட ரசிகர்களை வயிறு குலுங்க இன்றளவும் சிரிக்க வைத்து வருகிறது.

Vadivelu and Prabhudeva new movie pooja happened at Dubai
Photo Credit:

பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களிலும் வடிவேலு தான் காமெடியனாக நடித்து கலக்கியிருப்பார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். சமீபத்தில், இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்ற காட்சிகளும் வைரலான நிலையில், இன்று படபூஜை போடப்பட்டுள்ளது.

சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்: பிரபுதேவாவை வைத்து படம் இயக்க வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்த சாம் ரோட்ரிக்ஸ் ஏற்கனவே முசாசா எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், பிரபுதேவாவுடன் வடிவேலை இணைத்து எவர்க்ரீன் காமெடி கூட்டணியில் ஒரு பக்காவான காமெடி படத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். அந்த படத்திற்கான பூஜை இன்று துபாயில் போடப்பட்டது. அதன் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில்: லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் உருவாகும் படம் உருவாகப் போகிறது. இந்த படத்தில் பப்லு பிரித்விராஜ் வில்லனாக நடிக்கப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இன்று துபாயில் நடைபெற்ற படபூஜையில் பப்லு பிரித்விராஜும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மாரீசனை தொடர்ந்து: பகத் ஃபாசிலுடன் வடிவேலு நடித்த மாரீசன் திரைப்படம் தியேட்டர்களில் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், வடிவேலுவின் அடுத்த படம் என்ன? என்கிற கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து அவர் காமெடி ரூட்டில் பயணிப்பாரா? அல்லது சீரியஸ் ரூட்டில் பயணிப்பாரா? என்கிற கேள்விக்கு இரண்டு பாதைகளிலும் பயணம் செய்யவே அவர் விரும்புவது தெளிவாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X