»   »  மீண்டும் அரசியல்..? ஆள விடுங்கப்பு! - வடிவேலு

மீண்டும் அரசியல்..? ஆள விடுங்கப்பு! - வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, ஆளை விடுங்கப்பு என்று பதில் கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

விஷாலின் ‘கத்தி சண்டை' என்ற புதிய படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு.

Vadivelu dont like to talk politics

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார்,

இந்தப் படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற வடிவேலுவிடம், தேர்தல் காலமாயிற்றே அரசியலில் ஆர்வம் காட்டவில்லையா என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், "ஏன்... எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு... எதுக்கு இப்போ அரசியல்? ஆளை விடுங்கப்பு," என்றார்.

மீண்டும் காமெடி வேடத்துக்கு திரும்பியது குறித்துப் பேசுகையில், "நான் கதாநாயகனாகவும் நடிப்பேன். நகைச்சுவை வேடங்களிலும் நடிப்பேன். இனிமேல் இரண்டு வழிப்பாதை தான். நிறைய படங்களில், படம் முழுக்க வருகிற மாதிரி நகைச்சுவை வேடங்களில் நடிக்க இருக்கிறேன்.

இந்த படத்தின் இயக்குநர் சுராஜ், எனக்கு தகுந்த மாதிரி நடிப்பதற்கு தீனி போடுவார். அதனால் நம்பிக்கையுடன் நடிக்கிறேன். படம் நிச்சயமாக வெற்றி பெறும்,'' என்றார்.

அப்பாடி... காமெடி பஞ்சம் ஒரு வழியா தீரப் போகுது!

English summary
Actor Vadivelu says that he wont talk about politics hereafter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil