முரட்டு சிங்கிளாக அஜித்...மாஸ் வைரலாகும் வலிமை BTS ஃபோட்டோஸ்
சென்னை : நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் எதுவும் ரிலீசாகவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் அவரின் வலிமை படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக சமீபத்தில் படத்தின் ஷுட்டிங்கை முடித்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்கி உள்ளனர். இந்த படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சாதனை படைத்த க்ளிம்ப்ஸ்
இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு படத்தின் டீசர் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்ஷன், பைக் ரேஸ் என மாஸான இந்த க்ளிம்ப்சை அஜித் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடினர். இது லட்சக் கணக்கில் வ்யூவை குவித்து சாதனை படைத்து வருகிறது.

பிடிஎஸ் ஃபோட்டோஸ்
இதற்கிடையில் வலிமை படத்தின் BTS ஃபோட்டோக்கள், எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி வருகிறது. இந்த ஃபோட்டோக்களில் காணப்படும் வலிமை செட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் அஜித் குடும்பத்துடன் கோயிலில் இருப்பது, பைக்கில் வருவது போன்ற ஸ்டில்கள் வெளியாகின.

முரட்டு சிங்கிளாக அஜித்
இந்நிலையில் வலிமை படத்தில் ஹுமா குரேஷியின் ரோல் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹுமா ஹீரோயின் ரோலில் நடிக்கவில்லையாம். அஜித்தின் ஃபிரண்ட் ரோலில் தான் நடித்துள்ளாராம். அதே சமயம் தல அஜித், முரட்டு சிங்கிள் ரோலில் தான் வலிமை படத்தில் நடித்துள்ளாராம். இந்த தகவலை டைரக்டர் ஹச்.வினோத்தும் உறுதி செய்துள்ளார்.

வில்லனுடன் பைக் ரேஸ்
தற்போது வெளியாகி உள்ள BTS ஃபோட்டோவில் அஜித் மற்றும் கார்த்திகேயா இணைந்து பைக் ரேஸ் உடையில், ரேசுக்கு தயாராக இருப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த ஃபோட்டோ அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. இதனை சோஷியல் மீடியாவில் செம வைரலாக்கி வருகிறார். அஜித் பைக் ஓட்டும் ஃபோட்டோவையே அவரது ரசிகர்கள் விட மாட்டார்கள். இந்நிலையில் வில்லன் கார்த்திகேயாவுடன் மோதும் பைக் ரேஸ் ஃபோட்டோ என்றால் கேட்கவா வேண்டும்.

இது தான் வலிமை கதை
த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ள வலிமை படத்தில் போலீஸ் வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இவருடன் ஹுமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சட்ட விரோத பைக் ரேஸ், கொலை, போதைப் பொருள் கடத்தல் ஆகியவை செய்யும் கும்பலுக்கும் போலீசுக்கும் இடையேயான மோதல் தான் படத்தின் கதை என எதிர்பார்க்கப்படுகிறது.

இளமை தோற்றத்தில் அஜித்
தனது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் மீண்டும் அஜித் இளமை தோற்றத்தில் நடித்துள்ள படம் என்பதால் வலிமை படத்தின் மீதான அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











