கையில் சரக்கும் சாட்டிலைட் போனும்.. மிரட்டும் வலிமை வில்லன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் #HBDKartikeya

சென்னை: தல அஜித்தின் வலிமை பட வில்லனும் பிரபல தெலுங்கு நடிகருமான கார்த்திகேயா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர் கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

#HBDKartikeya ஹாஷ்டேக்கை போட்டு தல ரசிகர்கள் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வில்லனான ஹீரோ

வில்லனான ஹீரோ

பிரேமதோ மீ கார்த்திக் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் மூலம் டோலிவுட்டில் மிகவும் பிரபலமானார். தல அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக மாறிய கார்த்திகேயா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

வில்லனுக்கே வில்லன்

வில்லனுக்கே வில்லன்

தல அஜித் நடிப்பில் வெளியான வில்லன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், வில்லனுக்கே வில்லனாக டோலிவுட் ஹீரோ கார்த்திகேயா வலிமை படத்தில் எப்படி மிரட்டப் போகிறார் என்பதையும் கார்த்திகேயாவை தல எப்படி துவம்சம் பண்ணப் போகிறார் என்பதையும் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

90ஸ் கிட்

90ஸ் கிட்

பிரபல தெலுங்கு நடிகரும் வலிமை பட வில்லனுமான கார்த்திகேயா இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1992ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பிறந்த கார்த்திகேயாவும் 90ஸ் கிட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில், முதல் ஆளாக அப்டேட் கொடுத்ததே கார்த்திகேயா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சரக்கும் சாட்டிலைட் போனும்

சரக்கும் சாட்டிலைட் போனும்

வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயாவின் அசத்தலான வலிமை பட போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டு நடிகர் கார்த்திகேயாவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளது. கார்த்திகேயாவின் கையில் சாட்டிலைட் போன் மற்றும் சரக்கு இருப்பதை பார்த்த ரசிகர்கள் கதை எப்படி இருக்கும் என கெஸ் பண்ண ஆரம்பித்துள்ளனர்.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்

பைக் ரேஸ் படமாக உருவாகி உள்ள வலிமை படத்தின் கதை ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படம் போல இருக்கும் என ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர். பைக்குகளை வைத்து கடத்தல் தொழிலை செய்து வரும் கூட்டத்தை கூண்டோடு பிடிக்க தல அஜித்தும் பைக் ரேஸராக மாறி வில்லன்களை வேட்டையாடும் படமாக வலிமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் எச். வினோத் என்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

ராஜா விக்ரமர்கா

ராஜா விக்ரமர்கா

வலிமையில் வில்லனாக நடித்து வரும் நடிகர் கார்த்திகேயா தெலுங்கில் ஹீரோவாக ராஜா விக்ரமர்கா படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது. நடிகர் சிரஞ்சீவி மற்றும் அமலா நடிப்பில் வெளியான ராஜா விக்ரமர்கா படத்தின் டைட்டிலில் நடித்து வருவது தனக்கு கிடைத்த பாக்கியம் எனக் கூறி உள்ளார் கார்த்திகேயா. அந்த படத்தின் அப்டேட்டும் இன்று வெளியாகும் என கார்த்திகேயா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தீபாவளி ரேஸ் இல்லை

தீபாவளி ரேஸ் இல்லை

ரேஸ் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள தல அஜித்தின் வலிமை படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி விட்டதாகவும் கிறிஸ்துமஸ்க்கு தான் படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தல ரசிகர்கள் அடுத்த சிங்கிள் மற்றும் படத்தின் டீசரையாவது வெளியிடுங்க என மீண்டும் அப்டேட் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆயுத பூஜைக்கு வலிமை பட டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X