நீங்க என்ன என் மகன கிண்டல் செய்றது.. லிங்கா வீடியோவே எடுக்கல.. மேடையில் தனுஷின் ரியாக்ஷனை பாருங்க
சென்னை: நடிகர் தனுஷ் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் என பலர் நடித்திருக்கிறார்கள். படமானது நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தனது மகன் லிங்கா பற்றி தனுஷ் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் கலக்குபவர் தனுஷ். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டோரை வைத்து பவர் பாண்டி திரைப்படத்தை இயக்கி அவர் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது. அடுத்ததாக தனது சகோதரி மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகம் செய்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை.
இட்லி கடை தனுஷ்: இப்போது அவர் இட்லி கடை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் சம்பாதித்திருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக அவர் நடித்த மூன்று படங்களுமே தோல்வியை பெற்றன அல்லது சுமாரான வரவேற்பை பெற்றன. எனவே இதில் அவர் கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

ட்ரெய்லர் ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. சாதாரண இட்லி கடை போட்டிருக்கும் தனுஷுக்கும், கார்ப்பரேட் முதலாளியான அருண் விஜய்க்கும் நடக்கும் மோதல்தான் படத்தின் ஒன்லைன் என்பது ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது. ஜிவியின் பின்னணி இசையும், தனுஷ் - நித்யா மேனன் கெமிஸ்ட்ரியும் பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் நல்ல வரவேற்பை சந்திக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
தீவிரமாகும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள்: படமானது நாளை முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. டிக்கெட் புக்கிங் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படிதான் இருக்கின்றன. படக்குழுவும் தன் பங்குக்கு தீவிரமான ப்ரோமோஷனை செய்துவருகிறது. தனுஷும் ஆர்வத்தோடு பங்கேற்றுவருகிறார். சூழல் இப்படி இருக்க அவர் தனது இரண்டாவது மகன் லிங்கா பற்றி பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ?: அதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,'நான் சிறந்த தகப்பன் என்பதில் பெருமையாக இருக்கிறது' என கூறினார். மேலும் தனது இளைய மகன் லிங்காவை பார்த்து, 'என்ன லிங்கா நம்மல எல்லாம் வீடியோ எடுக்கல' என கேட்டார். முன்னதாக தனுஷின் எந்தப் பட ஆடியோ வெளியீட்டு விழாவாக இருந்தாலும் லிங்கா தனது மொபைலை எடுத்து வீடியோ பதிவு செய்ய ஆரம்பிப்பார். அதனை வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்ததும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











