டைரக்டர் ஜெனநாதனின் கடைசி படம்...விஜய் சேதுபதியின் லாபம் ரிலீஸ் தேதி வந்தாச்சு

சென்னை : தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல மொழிகளில், பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். கிட்டதட்ட 2 டஜன் படங்களில் இவர் கமிட் ஆகி உள்ளார். பல படங்களில் தயாராகி ரிலீசுக்காக காத்திருக்கிறது. சில படங்கள் தயாராகி வருகின்றன.

விஜய் சேதுபதி நடித்த கணவர் பெயர் ராணாசிங்கம் படத்தை தொடர்ந்து துக்ளக் தர்பார் படமும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படம் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10 ம் தேதி சன் டிவி மற்றும் நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட உள்ளது.

 Vijaj sethypathis Laabam movie confirms theatrical release

அரசியல் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள துக்ளக் தர்பார் படத்தில் பார்த்திபன், ராஷி கன்னா, மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

லேட்டஸ்ட் தகவலாக, விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அரசியல் த்ரில்லர் படமான லாபம், செப்டம்பர் 9 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி. ஜெனநாதன் கடைசியாக இயக்கிய படம் இதுவாகும்.

தான் இயக்கிய முதல் படமான இயற்கை படத்திற்காக தேசிய விருது பெற்ற ஜெனநாதன், லாபம் படத்தின் எடிட்டிங் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது தான் திடீரெ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஆகியோருடன் ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தை 7 சி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து, விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் சேதுபதியின் 2 படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆக உள்ளது உறுதியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் இந்த படங்களை காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வார இறுதி நாட்களான செப்.,9 லாபம் தியேட்டரிலும், செப்.,10 துக்ளக் தர்பார் ஓடிடி.,யிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X