»   »  சிவாஜி பாட்டு - போக்கிரி பாராட்டு!

சிவாஜி பாட்டு - போக்கிரி பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படப் பாடல்கள் படு சிறப்பாக இருப்பதாக நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.

அடுத்த ரஜினி என ரசிகர்களால் அன்போடு வர்ணிக்கப்படுபவர் விஜய். அப்படியே ரஜினி பார்முலாவை (வருதோ, இல்லையோ) இம்மி பிசகாமல் கடைப்பிடித்து ஓரளவுக்கு மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி விட்டார் விஜய்.

சமீபத்தில் வெளியான அவரது போக்கிரி சூப்பர் ஹிட் படமாகி விட்டது. போட்டியாளாரான அஜீத், போட்டியே இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் ரஜினியின் சிவாஜி பாட்டுக்கள் நன்றாக இருப்பதாக விஜய் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் போக்கிரி பட வெற்றி விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய விஜய், சிவாஜி படப் பாடல்களைக் கேட்டேன். நன்றாக உள்ளது, அருமையாக உள்ளது.

போக்கிரி படத்தின் வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. இயக்குநர் பிரபு தேவா, கதாபாத்திரங்கள் சிறப்பாக வர பாடுபட்ட அனைவருமே அதற்குக் காரணம்.

எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. ரசிகர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவது அரசியலை மனதில் வைத்து அல்ல. எனது ஆத்ம திருப்திக்காககவே வழங்கி வருகிறேன்.

எனக்கு ஆக்ஷன் படம்தான் பிடிக்கும். அதனால்தான் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறேன். இருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்கும்.

இப்போது அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை நான் நடித்துள்ள 45 படங்களிலும் வித்தியாசமானதாக இப்படம் அமையும். அனைத்துத் தரப்பினரையும் இப்படம் கவரும் என்றார் விஜய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil