»   »  விஜய் - லாரன்ஸ் கூட்டு?

விஜய் - லாரன்ஸ் கூட்டு?

Subscribe to Oneindia Tamil

விஜய்யும், டான்ஸ் மாஸ்டரும் இயக்குநரமான லாரன்ஸ் ராகவேந்திராவும் இணைந்து புதிய படம் ஒன்றை கொடுக்கப் போவதாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இதை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மறுத்துள்ளார்.

நடிகர்கள் இயக்குநரான காலம் போய் இப்போது டான்ஸ் மாஸ்டர்கள் இயக்குநராகி வருவது புதிய டிரெண்டாக உள்ளது. முதலில் பிரபுதேவா இயக்குநரானார். பின்னாலேயே லாரன்ஸ் ராகவேந்திராவும் டைரக்டர் ஆனார். இருவரும் தெலுங்கில் இயக்குநர்களாகி, தமிழுக்கும் பின்னர் வந்தனர்.

பிரபுதேவாவும், லாரன்ஸும் தெலுங்கில் தலா 2 படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்கள். தமிழில் பிரபுதேவா போக்கிரி படத்தையும், லாரன்ஸ் முனி படத்தையும் இயக்கினர். போக்கிரி சூப்பர் ஹிட் ஆனது, ஆனால் முனி ஹிட் படமாகத் தவறியது.

இதனால் அப்செட் ஆன லாரன்ஸ் மீண்டும் தெலுங்குக்கேத் தாவி விட்டார். அங்கு நாகார்ஜுனாவை வைத்து டான் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் விஜய்யை சந்தித்து டான் கதையைக் கூறி, தமிழில் இதைச் செய்யலாம், நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டாராம். இதற்கு விஜய்யும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்போதைக்கு லாரன்ஸ் படத்தில் விஜய் நடிக்கும் திட்டம் ஏதும் இல்லை. சில செய்தித் தளங்களில் (தட்ஸ்தமிழ் அல்ல) இதுதொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது தவறான தகவல்.

இப்போதைக்கு விஜய், தரணி இயக்கத்தில், உதயநிதி தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் மட்டுமே அவர் ஒப்பந்தமாகியுள்ளார். வேறு எந்தப் படத்தையும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றார்.

இதுகுறித்து விஜய்யைத் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று முயன்ற போது தளபதி சிக்கவில்லை.

சேர்ந்தா நல்லாத்தான் இருக்கும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil