»   »  விஜய்: அழகிய தமிழ்மகன்கதை சுடப்பட்டதா?

விஜய்: அழகிய தமிழ்மகன்கதை சுடப்பட்டதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய், ஸ்ரேயா, நமிதா நடித்து நடித்து வரும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் எம்.எப்.ராஜா என்கிற முகம்மது பரூக் என்பவரின் கதையைத் திருடி இப்படம் எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பரூக் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

2004ம் ஆண்டு ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டோம். படத்திற்கு எங்க ஊர்ல நடந்த கதை என்று பெயரிட்டிருந்தோம். சில காரணங்கள் படம் பாதியில் நின்று விட்டது. அதந் பின்னர் கதையில் சில மாறுதல்களைச் செய்து நடிகர் விஜய்யை, நானும், இயக்குநர் பிரேம் நவாஸும் சென்று சந்தித்தோம்.

பிறகு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கதையைச் சொன்னோம். அப்போது விஜய்யும் அங்கிருந்து கதையைக் கேட்டார். படத்திற்கு குரு பிரசாத் என பெயரிட்டோம்.

விஜய்க்கும், அவரது தந்தைக்கும் கதை பிடித்து விட்டது. கண்டிப்பாக கால்ஷீட் தருவதாக விஜய் உறுதியளித்தார். அதன் பின்னர் பிரேம் நவாஸைக் கூப்பிட்ட அவர்கள், தயாரிப்பாளர் அப்பச்சனிடமும் கதையைச் சொல்லுமாறு கூறினர்.

எனக்குத் தெரியாமல் பிரேம் நவாஸ், அப்பச்சனை சந்தித்து கதையைக் கூறினார். கதை அப்பச்சனுக்குப் பிடித்துப் போகவே, அவர் தானே தயாரிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அழகிய தமிழ் மகன் பட அறிவிப்பு வெளியானது. எனக்குத் துரோகம் செய்த நவாஸ், ஜீவா என பெயரை மாற்றிக் கொண்டு அழகிய தமிழ் மகன் யூனிட்டுடன் சேர்ந்து கொண்டார்.

இவை எதற்குமே எனது ஒப்புதலை நவாஸ் பெறவில்லை. இந்தத் துரோகத்தை அறிந்த நான் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தேன். எனக்கு ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக தருமாறு தயாரிப்பாளர் கவுன்சில் உத்தரவிட்டது. இதையடுத்து அழகிய தமிழ் மகன் தயாரிப்பாளர் எனக்கு ரூ. 1 லட்சம் கொடுத்தார். மீதப் பணத்தை சில வாரங்களில் தந்து விடுவதாக உறுதியளித்தார்.

ஆனால் இந்த நிமிடம் வரை எனக்கு அந்தப் பணம் வந்து சேரவில்லை. எனவே எனது பாக்கிப் பணத்தை தர வேண்டும். அதுவரை ஷூட்டிங் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரியிருந்தார் பரூக்.

இதை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, படத்தைத் தயாரிக்கவும், வெளியிடவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி அழகிய தமிழ் மகன் படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரேசகர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை படத்தின் கதையும் இதுபோல சர்ச்சைக்குள்ளானது, நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றது நினைவிருக்கலாம்.

அழகிய தமிழ் மகன் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் கால்வாசி ஷூட்டிங்தான் பாக்கி உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளது. இந்த நிலையில்தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதை அறிந்த விஜய் அப்செட் ஆகி விட்டாராம். தயாரிப்பாளர் அப்பச்சனைத் தொடர்பு கொண்ட அவர் பாக்கிப் பணத்தை உடனடியாக தந்து பிரச்சினையை முடிக்குமாறு கேட்டுக் கொண்டாராம். அனேகமாக இன்றைக்கே பிரச்சினை தீர்ந்து விடும் என்று தெரிகிறது.

படத்தின் கதை இதுதான் ..

அழகிய தமிழ் மகன் படத்தின் கதை உண்மையில் ஒரிஜினல் தமிழ்க் கதையே கிடையாது. 2004ம் ஆண்டு வெளியான ஆங்கிலப்படமான இஃப் ஒன்லி படத்தின் கதையைத்தான் உல்டா செய்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர்.

அதாவது விஜய்க்கு கனவுகள் மூலமாக எதிர்காலத்தில் நடக்கப் போவது முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இந்த சக்தியைக் கொண்டு பலரைக் காப்பாற்றுகிறார். ஒரு நாள் தான் இறந்து போவதாக கனவு காண்கிறார் விஜய்.

தனது உயிரைக் காப்பாற்ற அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு விஜய் வந்து கனவு காணும் விஜய்யைக் காப்பாற்றுகிறாராம். இப்படிப் போகிறது அழகிய தமிழ் மகன் கதை.

இந்தக் கதைக்குத்தான் இவ்வளவு அக்கப்போரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil