»   »  விஜய் பிறந்த நாள் .. ரசிகர்கள் தடபுடல்

விஜய் பிறந்த நாள் .. ரசிகர்கள் தடபுடல்

Subscribe to Oneindia Tamil

இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் தடபுடலாக ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் பாதையில் மெல்ல மெல்ல அடியெடுத்து அமர்க்களமாக நடந்து வரும் விஜய்க்கு, நாளை பிறந்த நாள்(எத்தனை வயசோ!). இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வைத்துக் கொண்டாட்டத்திற்கு காத்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் சார்பில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தைப் பரிசாக அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன் கூறுகையில், விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். ரசிகர் மன்றம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 6 லட்சம் மாணவ மாணவியருக்கு இது வழங்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நாளை பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்படும்.

இதுதவிர ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கவும் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே, பிறந்த நாளையொட்டி தனது கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பேனர்களுக்குப் பூஜை செய்வது போன்றவற்றில் ரசிகர்கள் ஈடுபடக் கூடாது என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதை விடுத்து பொதுமக்களுக்கு பயனுள்ள காரியங்களில் ஈடுபடுமாறும் அறிவுரை கூறியுள்ளார்.

நல்ல அட்வைஸ்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil