»   »  டாக்டராக இருந்த விஜய்!!

டாக்டராக இருந்த விஜய்!!

Subscribe to Oneindia Tamil

விஜய்யை டாக்டராக்கிப் பார்க்க நினைத்தோம். ஆனால் தனது உழைப்பால் இன்று மிகப் பெரும் நடிகராகியுள்ளார் விஜய் என்று அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

ஈரோடு, கவிதாலயம் மற்றும் கொங்கு இளைஞர் சங்கம் ஆகியவை இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி ஷோபாவுக்கு வாழும் வரலாறு என்ற விருது கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது. நீல்கிரிஸ் நிறுவன தலைவர் ராஜா விருதினை வழங்கினார். பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய் குறித்து உருக்கமாக பேசினார்.

விஜய்யை வைத்து நான் ஆரம்பத்தில் படம் இயக்கியபோது பலரும் கிண்டலடித்தனர், கேலி பேசினர். எனது உதவியாளர்களே கூட ரகசியமாக கிண்டலடித்தனர். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை.

நான் எப்போதுமே எதையுமே பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டுதான் வழக்கம். அந்த வகையில் எந்த கேலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விஜய்யை நடிக்க வைத்தேன்.

வெற்றி, தோல்வி குறித்துக் கவலைப்படாமல் தொடர்ந்து ஐந்து படங்களை விஜய்க்காக இயக்கினேன். ரசிகன் வெள்ளி விழா கொண்டாடியபோது விஜய்யைப் பார்த்து தமிழ்த் திரையுலகம் ஆச்சரியப்பட்டது.

பூவே உனக்காக பெரும் திருப்புமுனையைக் கொடுத்தது. அதுதான் விஜய்யின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய படம். அதன் பின்னர் விஜய் தனது கடுமையான முயற்சியினால், உழைப்பினால் இன்று இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார்.

விஜய்யை நாங்கள் டாக்டராக்கிப் பார்க்கத்தான் ஆசைப்பட்டோம். ஆனால் விஜய்தான் நடிகராகப் போகிறேன் என்று கூறினார். அவருக்காக படம் எடுக்குமாறு எங்களை வற்புறுத்தினார். அப்போது நான் தயங்கினேன். ஆனால் விஜய்யிடம் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததைப் பார்த்த பின்னர் இயக்க முடிவெடுத்தேன்.

இயக்கியது போதும், ஓய்வெடுங்கள் என்கிறார் விஜய். நான் ஓய்வெடுக்க மாட்டேன்.

இப்போதுள்ள இளம் இயக்குநர்களுக்குப் போட்டியாக, அவர்களுடன் போட்டி போடும் வகையில், தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பேன் என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil