»   »  விஜய் ஜோடி வித்யா

விஜய் ஜோடி வித்யா

Subscribe to Oneindia Tamil

திரிஷாவைத் தூக்கி விட்டு தனது நாயகியாக வித்யா பாலனைத் தேர்வு செய்துள்ளார் விஜய்.

விஜய்யின் மனம் கவர்ந்த நாயகிகளில் திரிஷாவும் ஒருவர். கில்லியில் இவர்கள் சொல்லி அடித்த வெற்றியால் ராசியான ஜோடி என்ற பெயரைப் பெற்றனர். விஜய் சமீபத்தில் சிக்சர் அடித்த போக்கிரியிலேயே திரிஷா மீண்டும் ஜோடி சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஆசின் முந்திக் கொண்டு விட்டார்.

இதனால் திரிஷா ஏமாற்றத்தில் இருந்தார். இருந்தாலும் அவர் கூல்படுத்தி வைத்திருந்த விஜய் மீண்டும் சேருவோம் என்று ஆதரவாகவும் சொல்லி வைத்திருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் கலைஞரின் பேரனும், அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அவரது முதல் படைப்பை தரணி இயக்க, விஜய், திரிஷா ஜோடி போட்டு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் திரிஷாவுக்கும், விஜய்க்கும் இடையே லேசான கருத்து வேறுபாடு உருவானது. போக்கிரி பட வெள்ளி விழாவுக்கு திரிஷாவை விஜய் கூப்பிடாததால் அவர் அப்செட் ஆகி அழுதுள்ளார். இதையடுத்து திரிஷாவையும், அவருடைய அம்மாவையும் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குக் கூப்பிட்டு சாந்தப்படுத்தினார் விஜய்.

ஆனால் திரிஷாவின் மீது திடீரென விஜய்க்கு ஏதோ பிடிக்காமல் போய் விட்டது போலும். உதயநிதி படத்திலிருந்து திரிஷாவைத் தூக்கச் சொல்லி விட்டார் விஜய். இதற்கு தரணி முதலில் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கவே திரிஷாவை தூக்கியே விட்டனர்.

விஜய், தரணி, உதயநிதி இணையும் இப்படத்திற்கு கருவி என்று பெயரிட்டுள்ளனர். பெரும் பொருட் செலவில் இப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக வித்யா பாலனை போட தீர்மானித்துள்ளனர். இதற்காக அவரை அணுகினர். அவரும் சரி என்று கூறி விட்டாராம்.

விஜய், வித்யா பாலன் இணையில் உருவாகும் கருவி படம் தொடர்பான அனைத்து முறையான அறிவிப்புகளும் இந்த வார இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜய், வித்யா இணை வெல்லுமா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil