»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய் இன்று (22.06.04) தனது பிறந்த நாளை சென்னையில் எளிமையாகக் கொண்டாடினார்.

அவருக்குச் சொந்தமான ஷோபா திருமண மண்டபத்தில் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன், தாயார் ஷோபா, மனைவி சங்கீதா, ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய்.

திரையுலகப் பிரபலங்களும், ஏராளமான ரசிகர்களும் விஜய்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியை எளிமையாக முடித்துக் கொண்ட விஜய், மதுர படத்தின் சூட்டிங்குக்காக புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இது தவிர ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் பிறந்த நாள் விழா நடக்கிறது. இதில் ஏழை, எளியவர்களுக்கு விஜய் உதவித் தொகையை வழங்குகிறார்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil