»   »  விஜய் 59: செல்லாக்குட்டி எனக் கொஞ்சிய விஜய்

விஜய் 59: செல்லாக்குட்டி எனக் கொஞ்சிய விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 59 படத்தில் செல்லாக்குட்டி என்று தொடங்கும், ஒரு டூயட் பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.

இந்தத் தகவலை படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். தலைவா, கத்தி, புலி படங்களில் ஒரு பாடலைப் பாடிய விஜய் இந்தப் படத்திலும் பாடகராக மாறியிருக்கிறார்.

படத்தின் தலைப்பு இன்னும் உறுதியாகாத நிலையில் படப்பிடிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ‘செல்லாக்குட்டி' என்று தொடங்கும் அந்த பாடல் ரொமான்ஸ் கலந்த குத்துப்பாடலாக உருவாகியிருக்கிறதாம்.

இந்த படத்தில் மொத்தம் இரண்டு பாடல்களை விஜய் பாடவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

வழக்கமாக தனது படங்களில் 1 பாடலைப் பாடும் விஜய் இந்தப் படத்தில் 2 பாடல்களைப் பாடி ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். மற்றொரு பாடல் என்ன என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

விஜயின் 59 படமாக உருவாகி வரும் இப்படம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50 வது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இசை மற்றும் பாடல்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

English summary
Vijay Sings a Song For Vijay59. G.V.Prakash Tweeted "Ilayathalapathy sings his first song for #VJ59 #GV50 the song will be called as #chellaakutty".
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil