»   »  ஜில்லாவைத் தொடர்ந்து 'தல'யுடன் மீண்டும் மோதும் தளபதி?

ஜில்லாவைத் தொடர்ந்து 'தல'யுடன் மீண்டும் மோதும் தளபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த வருட பொங்கலுக்கு அஜீத், விஜய் படங்கள் நேரடி மோதலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் அஜீத், விஜய்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. பெரும்பாலும் இவர்களின் படங்கள் வெளியாகும் நாளில் வேறு படங்களை வெளியிட மற்றவர்கள் தயங்குவார்கள்.

இந்நிலையில் வருகின்ற 2017 ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தல 58 மற்றும் விஜய் 60 இரண்டு படங்களும் நேரடி மோதலில் ஈடுபடப்போவதாக கூறுகின்றனர்.

Vijay, Ajith once Again Clash for next Pongal

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 3 வது முறையாக நடிக்கும் படம் வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது. அதேபோல பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மே மாதம் தொடங்குகிறது.

இந்த 2 படங்களையும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட, இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இரண்டு படங்களுமே பக்கா கமர்ஷியல் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ். அதே போல பொங்கல் தினம் என்பதால் கொண்டாட்டங்களுக்கும் குறைவிருக்காது.

இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களுமே உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.கடைசியாக 2014 ம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் படங்களின் மூலம் இருவரும் நேரடியாக மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

2 பேரோட ரசிகர்களும் தெறிக்க விடுவாங்களே!

English summary
Sources Said After Jilla, Veeram Vijay& Ajith once Again Clash for Next Year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil