»   »  தல ரசிகன் என்றாலும் தளபதியையும் பிடிக்கும்- சிம்பு

தல ரசிகன் என்றாலும் தளபதியையும் பிடிக்கும்- சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் அஜீத்தின் ரசிகன் என்றாலும் விஜய்யின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும் என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.

சிம்பு-நயன்தாரா நடிப்பில் கடந்த மாதம் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலான வரவேற்பு+ வசூல் இரண்டிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

Vijay Anna Knows me Says Simbu

இதனால் உற்சாகமடைந்த சிம்பு படக்குழுவினர், ரசிகர்கள் உட்பட இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் ரசிகர்களுடனான கலந்துரையாடல் ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நிகழ்த்தினார். அதில் ரசிகர் ஒருவர் விஜய் அண்ணா பற்றிக் கூறுங்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு சிம்பு ''பலரும் நான் அஜீத் ரசிகன் என்பதால் விஜய்யைப் பிடிக்காது என்று எண்ணுகிறார்கள். ஆனால் எனக்கு விஜய்யின் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

சமீபத்தில் அவரின் தெறி படம் பார்த்து அசந்து விட்டேன். அட்லீ ஒரு மாஸ் ஹீரோவை செமையாக காட்டியிருக்கிறார்'' என தெரிவித்திருக்கிறார்.

அஜீத் படமென்றால் முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடும் சிம்பு தன்னுடைய படங்களிலும், தான் அஜீத் ரசிகன் என்று சொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதே நேரம் சிம்புவின் வாலு படத்தை வெளியிட விஜய் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
''Vijay is Like my Brother and he knows very well me'' Simbu says in Recent Interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil