»   »  சூர்யா, கார்த்தி, விஷால் வரிசையில் விஜய் ஆண்டனி?

சூர்யா, கார்த்தி, விஷால் வரிசையில் விஜய் ஆண்டனி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் ஹீரோக்கள் எல்லோருக்குமே தெலுங்கு சினிமா மீது மோகம் இருக்கும். காரணம் தமிழ் சினிமா மார்க்கெட்டை விட தெலுங்கு மார்க்கெட் பெரியது.

சூர்யா, கார்த்தி, விஷால் மூவருமே தெலுங்கு மார்க்கெட்டையும் குறிவைத்து தான் நடிக்கிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் அவர்களுக்கு போட்டியாக தெலுங்கில் மார்க்கெட் பிடித்துக்கொண்டிருக்கிறார் இன்னொரு ஹீரோ.

அவர் இசையமைப்பாளராக இருந்து ஹீரோ ஆன விஜய் ஆண்டனி. நான் படம் மூலம் சைலண்டாக நுழைந்த விஜய் ஆண்டனி சலீம், பிச்சைக்காரன் மூலம் பெரிய மார்க்கெட்டை பிடித்துவிட்டார் தமிழில்.

பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு பிச்சக்காடுவாக கடந்த மே 13ல் வெளியானது. யாருமே எதிர்பாராத வகையில் சூப்பர் ஹிட் ஆகி 35 நாட்களை தாண்டி இன்னும் அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. முப்பது லட்சத்துக்கு வாங்கப்பட்ட டப்பிங் உரிமை 13 கோடியத் தாண்டி வசூலித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதை வாங்கியவராலேயே இன்னும் நம்பமுடியவில்லையாம்.

ஸோ, இனிமேல் விஜய் ஆண்டனியின் படங்கள் தெலுங்கிலும் நல்ல விலைக்கு போகும்.

சூர்யா, கார்த்தி, விஷால் க்ரூப் இதை பார்த்து நிச்சயம் வயிறு எரிந்திருக்கும் என முணுமுணுக்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்!

English summary
Music director turned actor Vijay Antony has captured the Telugu market with the super hit Pichaikkaran (Bichagadu).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil