Don't Miss!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்ன பாட்டுய்யா... ஒவ்வொரு செகண்ட்டும் என்ஜாய் பண்ணேன்... விஜய் ஆன்டனி பாராட்டு
சென்னை : நடிகர் விஜய் ஆன்டனி நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல அவதாரங்களை மேற்கொண்டுள்ளார்.
தான் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு இசையமைப்பதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
2021 டிசம்பர் 10 இல் வெளியாகும் 'மட்டி’ ... அதிரடி சகதி ரேஸ் திரைப்படம்
இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகவுள்ள அஜகஜந்தரம் என்ற படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள ஒல்லுலேரு பாடலை அவர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

நடிகர் விஜய் ஆன்டனி
நடிகர் விஜய் ஆன்டனி தமிழின் சிறப்பான நாயகனாக உருவாகியுள்ளார். இசையமைப்பாளராக இருந்த அவர் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து தன்னை நாயகனாகவும் வெளிப்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ரசிகர்கள் கொண்டாட்டம்
கடந்த 2005ல் சுக்ரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான விஜய் ஆன்டனி, தொடர்ந்து நான் அவனில்லை, நினைத்தாலே இனிக்கும் உளிளட்ட படங்களில் சிறப்பான பாடல்களை அமைத்தார். அவரது குரலில் ஒலித்த பாடல்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்தன.

ஸ்டைலிஷ் பாடல்கள்
ஸ்டைலிஷ்ஷான பாடல்களை அமைப்பதில் சிறப்பாக விளங்கிய விஜய் ஆன்டனிக்கு காதலில் விழுந்தேன் படம் சிறப்பான பெயரை பெற்றுத் தந்து. அதில் நாக்கமுக்க பாடல் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமானது. தொடர்ந்து தன்னை நான் படத்தின்மூலம் நாயகனாகவும் கோலிவுட்டில் நிலை நிறுத்திக் கொண்டார் விஜய் ஆன்டனி.

நாயகனாக விஜய் ஆன்டனி
இந்தப் படம் அவருக்கு நல்ல துவக்கத்தை கொடுத்த நிலையில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். தான் நடிக்கும் படத்தின் இசையமைப்பையும் அவர் கவனித்து வருகிறார். சில படங்களை தயாரித்தும் வருகிறார். சசியின் இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

கோடியில் ஒருவன் படம்
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படம் இவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார் விஜய் ஆன்டனி. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராகவும் மாறவுள்ளார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

ஒல்லலேரு பாடல்
சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக செயல்பட்டுவரும் விஜய் ஆன்டனி, தொடர்ந்து தன்னுடைய படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் உருவாகிவரும் அஜகஜந்தரம் படத்தின் ஒல்லுலேரு பாடல் குறித்து அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் ஒரு மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

என்ஜாய் செய்ததாக பாராட்டு
இந்தப் பாடலின் ஒவ்வொரு செகண்டையும் தான் மிகவும் என்ஜாய் செய்ததாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாடலின் வீடியோ லிங்கையும் ஷேர் செய்துள்ளார். படத்தில் நடித்துள்ள ஜஸ்டின் வர்கீஸ், ஆன்டனி வர்க்கீஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.