பிச்சைக்காரன் 2 ல் வர்ற விஜய் ஆன்டனி தான் ANTI BIKILI...அப்போ BIKILI யாருப்பா?

சென்னை : BIKILI யாருன்னு சொல்ல போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கையில் ANTI BIKILI யார் என்பதை மட்டும் வெளியிட்டு, BIKILI யாருன்னு நம்மிடமே திருப்பி கேட்டுள்ளார் விஜய் ஆன்டனி. இதனை வைத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக சோஷியல் மீடியாவில், கருப்பு நிற போர்டில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட, யாரு இந்த BIKILI என்ற போட்டோ அனைவரையும் மிகவும் யோசிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து BIKILI கிட்ட மாட்டிங்காதீங்க என்ற மற்றொரு போட்டோ வெளியிடப்பட்டது. இது ஏதோ படத்திற்கான ப்ரொமோஷன் என அனைவரும் யூகித்து விட்டனர். ஆனால் என்ன படம், யார் நடிக்கும் படம், இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என பலரும் கேட்டு வந்தனர்.

யாருப்பா அந்த பிகிலி

யாருப்பா அந்த பிகிலி

இன்னும் சிலர், தளபதி 66 பட டைட்டிலாக இருக்குமோ. இல்லையென்றால் ஏகே 61 பட டைட்டிலா என கேட்டு வந்தனர். ஆனால் வெகு சிலர் மட்டுமே இது விஜய் ஆன்டனி படமாக தான் இருக்கும் என்றனர். விஜய் படமான, அஜித் படமா, விஜய் ஆன்டனி படமா என அனைவரும் தலைமை பிய்த்து கொண்டிருந்த சமயத்தில், அது தன்னுடைய படத்திற்கான ப்ரொமோஷன் தான் என்பதை விஜய் ஆன்டனியே மறைமுகமாக தெரிவித்து விட்டார்.

யாருக்கும் தெரியக்கூடாது

யாருக்கும் தெரியக்கூடாது

இன்று இதே விளம்பரம், BIKILI யோட எதிரி ANTI BIKILI என்ற வாசகத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆன்டனி, உங்க கிட்ட மட்டும் சொல்கிறேன். நம்மள தவித்து, இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. BIKILI யோட எதிரி ANTI BIKILI என காலையில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ANTI BIKILI யார் என்பதை இன்று மாலை சொல்வதாக விஜய் ஆன்டனி கூறி இருந்தார்.

 நான் தான் ANTI BIKILI

நான் தான் ANTI BIKILI

இதே போல் மாலையில் அவர் வெளியிட்ட ட்வீட்டில் கால் மேல் கால் போட்டு கெத்தாக சோஃபாவில் உட்கார்ந்தபடி இருக்கும் பிச்சைக்காரன் 2 போஸ்டரை வெளியிட்டு, பிச்சைக்காரன் 2 படத்தில் வர்ற நான் தான் ANTI BIKILI அப்போ BIKILI யாரு? என பதிவிட்டுள்ளார். இதனால் காண்டான நெட்டிசன்கள் விஜய் ஆன்டனியை கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

என்ன ஜி, யாருன்னு எங்கள கேக்குறீங்க

என்ன ஜி, யாருன்னு எங்கள கேக்குறீங்க

பிச்சைக்காரன் 2 படத்தில் நீங்கள் இட்டை வேடமா. வேறு யாரு அதுவும் நான் தான்னு சொல்ல போறீங்க. எண்ணனே நீங்க படம் எடுத்துட்டு எங்களை யாரு யாருன்னு கேட்டுட்டு இருக்கீங்க. என்னமோ போங்க. சொந்த படத்துலயே வில்லன் ரோலா அல்லது டபுள் ஆக்ஷனா. அடப்பாவிங்களா...இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா. நீங்க என்ன வேணா பண்ணுங்க. ஆனால் பிச்சைக்காரன் நல்ல படம். அதோடு மரியாதையை கெடுத்துடாதீங்க. அந்த மாதிரி ஒரு ஆத்மார்த்தமான படம் கொடுங்க. நாங்க காத்துகிட்டு இருக்கோம். வேற லெவல் ப்ரொமோ அண்ணா. BIKIL யாரு விஜயகாந்த்தா அல்லது விஜய் சேதுபதியா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X