»   »  'பிரேமம்' நிவின்பாலியை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்

'பிரேமம்' நிவின்பாலியை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமம் படத்தின் நாயகன் நிவின்பாலியை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டியது தான் இன்றைய ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

நேரம் நாயகன் நிவின்பாலியின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் பிரேமம். நிவின் பாலியின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதல்களை மையமாக வைத்து இப்படம் வெளியாகி இருந்தது.

Vijay Appreciates Premam hero Nivin Pauly

கிட்டத்தட்ட சேரனின் ஆட்டோகிராப் சாயலில் வெளியான இப்படம் கேரள இளசுகளிடம் அபாரமான வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ்நாட்டில் 250 நாட்களை தாண்டி இதுவரை எந்த ஒரு மலையாளப் படமும் செய்யாத சாதனையை இப்படம் படைத்திருக்கிறது.இந்நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் பிரேமம் படத்தைப் பார்த்த பின் நேரில் அழைத்து நடிகர் நிவின்பாலியை பாராட்டியிருக்கிறார்.

It totally took me by surprise when I got an invite from Vijay Sir to his office. He had loved 'Premam' and sincerely...

Posted by Nivin Pauly onMonday, February 1, 2016

இது குறித்து நிவின் பாலி கூறும்போது "நடிகர் விஜய் சாரின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.பிரேமம் படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்தப் படத்திற்கான எங்களின் உழைப்பை பாராட்டி பேசினார். எங்களுக்கு கிடைத்த குறுகிய நேரத்தில் சினிமா மற்றும் கேரளாவின் மீதுள்ள காதல் குறித்து பேசினார்.

ஒருவரின் பாராட்டை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது. ஆனால் விஜய் சார் என்னை மனப்பூர்வமாக பாராட்டி இன்னும் சிறந்த படங்களை அளிக்க ஊக்கமளித்தார்.

அவரது நேர்மையான நடத்தை மற்றும் எளிமையை நேரில் பார்க்க ஒரு விருந்தாக அமைந்தது. நன்றி சார். உங்களின் தெறி படத்தைப் பார்க்க ஒரு ரசிகனாக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று நிவின் கூறியிருக்கிறார்.

நிவினின் இந்த பதிவு மற்றும் புகைப்படம் இரண்டும் தற்போது சமூக வலைதளங்களை ஒரு சுற்று சுற்றி வருகிறது.

English summary
Theri Star Vijay Appreciates Nivin Pauly's Acting in Premam. Now Nivin Pauly Shared his Experience in Social Network.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil