ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டுமில்லை.. ஆடியோ லாஞ்சும் ரத்து?.. ஜாலியான மோடுக்கு நோ சொன்ன விஜய்?

சென்னை: விஜய்க்கு சுமார் 250 கோடி சம்பளம் கொடுத்து படமெடுத்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தற்போது படமே திட்டமிட்டபடி எந்தவொரு சர்ச்சையும் பிரச்னையுமின்றி ரிலீஸ் ஆகுமா? என்கிற அச்சத்தில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இந்த வாரம் அக்டோபர் 5ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய் வாய்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அதை வெளியிட வேண்டாம் என விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijay avoids Jana Nayagan first single and even audio launch celebration too talks trending
Photo Credit:

மேலும், தீபாவளிக்கு கூட அந்த பாடல் வெளியாவது டவுட்டு தான் என்றும் இசை வெளியீட்டு விழாவும் நடக்காது என்று கூறுகின்றனர்.

போட்ட கணக்குலாம் வீணாப்போச்சு: அடுத்த ஆண்டு 2026ம் ஆண்டு தேர்தலை டார்கெட் செய்து நடிகர் விஜய் தனது ஜனநாயகன் படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்துள்ளார். இந்த ஆண்டே அந்த படம் வெளியாகி இருந்திருக்கும் என்றும் விஜய்யின் மாஸ்டர் பிளான் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ரிலீஸ் தள்ளிப்போனது என்கின்றனர். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில், விஜய் படம் தியேட்டரில் வெளியாகுமா என்கிற கேள்வியே எழுந்துள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் ரத்து: விஜய், ஜோதிகா நடித்து எஸ்.ஜே. சூர்யா நடித்த குஷி ரீ ரிலீஸ் படமே கரூர் துயரத்துக்குப் பிறகு தியேட்டர்களில் டல்லடித்து விட்டது. இந்நிலையில், அக்டோபர் 5ம் தேதி ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதை வெளியிட வேண்டாம் என விஜய் உத்தரவு போட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடியோ லாஞ்ச் நடப்பது கஷ்டம்: வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி என ஏகப்பட்ட கனவுகளுடன் இருந்த படக்குழு தற்போது கரூர் துயரத்துக்குப் பிறகு அமைதியான முறையில் படத்தை ரிலீஸ் செய்தால் மட்டுமே போதும் என்கிற மனநிலைக்கு வந்திருப்பதாகவும், நடிகர் விஜய் இப்போதைக்கு கரூருக்கு மட்டுமே சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்றும் பொங்கல் வரை கொண்டாட்டங்களில் ஏதும் பங்கேற்க மாட்டார் என்றே தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X