twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசூல் சக்கரவர்த்தியாக விஜய்யை மாற்றிய.. ஹிட் திரைப்படங்கள்.. பிறந்த நாள் ஸ்பெஷல் !

    |

    சென்னை : சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சோஷியல் மீடியாவை திணறடித்து வருகின்றனர்.

    Recommended Video

    Thalapathy Vijay | தொடர் வெற்றியில் முன்னணியில் Vijay... *Kollywood | Filmibeat Tamil

    வயது வெறும் எண் தான் என்பதுபோல் அவருடைய தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் இளமை அப்படியே நீடிக்கிறது. நிஜத்தில் அதிகம் பேசாத விஜய், படங்களில் பட்டையைக் கிளப்பி மாஸ் காட்டி வருகிறார்.

    கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்...இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே? கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்...இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே?

    விஜய்யின் திரைப்பயணத்தில் திரும்புமுனையை ஏற்படுத்தி திரைப்படங்களை பற்றி விஜய்யின் பிறந்த ஸ்பெஷல் ரவுண்டப்பில் பார்க்கலாம்.

    பூவே உனக்காக

    பூவே உனக்காக

    தமிழ் சினிமாவில் காதல் ஒரு அத்தியாவசியத் தேவையாகவே உள்ளது. காலத்தால் அழிக்க முடியாத காவிய அந்தஸ்து பெற்றுவிட்ட பல காதல் படங்கள் உள்ளன. ஆனால் காதலை முதன்மையான உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு படம் பூவே உனக்காக. இன்று விஜய் உச்ச நடிகராக வளர காரணமாக அமைந்தது இந்த படம். ஆபாசமில்லாமல் வக்கிரமில்லாமல் அழகாக காதலை சொன்ன ஒரு படம்.

    காதலுக்கு மரியாதை

    காதலுக்கு மரியாதை

    இந்து மதத்தைச் சேர்ந்த நாயகனும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நாயகியும் காதலிக்கிறார்கள். மதம் கடந்த காதலைச் சொன்ன பல படங்களைப் போலவே இதிலும் நாயகியின் குடும்பத்திடமிருந்து காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. ஆனால், பெற்றோருக்காக காதலை மறக்க ஓர் உணர்வுபூர்வமான திரைப்படமாக அமைத்து உண்மையில் காதலுக்கு மரியாதை செலுத்திய திரைப்படம்.

    கில்லி

    கில்லி

    தரணி இயக்கத்தில் வெளியான கில்லி விஜய்க்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே மிக முக்கியமான படம் எனச் சொல்லலாம். ஏனெனில், அத்தனை ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில், 50 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட முதல் தமிழ்ப் படம் கில்லிதான். பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமும் கில்லிதான்.

    குஷி

    குஷி

    இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் குஷி.ஜோதிகா விஜய் ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோடு காதலர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் குஷி அமைந்தது.

    சச்சின்

    சச்சின்

    2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. இந்த படத்தில் விஜய்யின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. இந்த படமும் வேற லெவல் ஹிட் தான்.

    நண்பன்

    நண்பன்

    விஜய்,ஸ்ரீகாந்த், ஜீவா என ஒரு மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளிவந்தது படம் நண்பன். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் 55 கோடியில் உருவாக்கப்பட்டு 86 கோடி ரூபாயை வசூல் செய்தது. காதல், ஆக்ஷன் காட்சிகளை விட்டு விஜய்யை வேறு ஒரு கோணத்தில் காட்டிய திரைப்படம் நண்பன்.

    துப்பாக்கி

    துப்பாக்கி

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம். விஜய்யின் சினிமா கரியரில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாகும். துப்பாக்கி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படமாக அமைந்துள்ளது.

    தெறி

    தெறி

    அட்லியின் இயக்கத்தில் விஜய் கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம் தெறி. இப்படத்தை விஜய் என்ற ஒற்றை மனிதர்தான் தாங்கிப்பிடித்திருந்தார். எந்த பந்தாவும் இல்லாத அழகான கதை விஜயை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டது.

    மெர்சல்

    மெர்சல்

    விஜய் அட்லி காம்போவின் 2ஆவது படம் மெர்சல், விஜய்யின் படங்களில் இது வரை இல்லாத அளவுக்கு மாஸ் பக்கா மாஸ் கதையாக அமைந்தது. ஆர்பரிக்கும் டான்ஸ், அதகளபடுத்தும் வசனங்கள் என ரசிகர்களுக்கு நன்றாக தீனிப்போட்டது. 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் விஜய் படம் என்ற சிறப்பை இப்படம் விஜய்க்கு பெற்றுத்தந்தது.

    மாஸ்டர்

    மாஸ்டர்

    விஜய், விஜய் சேதுபதி என இரண்டு முன்னணி ஹீரோக்களை லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். ஒரு கதைக்காக நாயகனா அல்லது நாயகனுக்காக கதையா என பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு தரமான படம். கொரோனாவால், 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்திலும் திரையரங்குக்கு மக்கள் சாரை சாரையாக வந்து படம் பார்த்தனர். இதற்கு முழு முதற்காரணம் விஜய் தான்.

    English summary
    Thalapathy Vijay is celebrating his 48th birthday today. Vijay Birthday special round up
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X